பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. டாக்டர். வா.செ. குழந்தைசாமி (குலோத்துங்கன்) இவர் திருச்சி மாவட்டத்தில் கரூருக்கு அருகிலுள்ள வாங்கலாம் பாளையம் என்ற சிற்றுரில் பிறந்தவர் (1929), இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உயர்கல்வி பெற்ற பொறியியல் அறிஞர். நீர் வளத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். நீர்வளத்துறைப் பேராசிரியர். தமிழகத் தொழில் நுட்பக் கல்வி இயக்குநர். மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் யுனெஸ்கோ ஆலோசகர். அண்ணா பல்கலைக் கழகத் துணை வேந்தர், இந்திரா காந்தி தேசியத் திறந்தவெளிப் பல்கலைக் கழகத் துணைவேந்தர். மேற்கண்ட பொறுப்புகள் பலவற்றையும் வகித்து ஓய்வு பெற்றவர். இவர் தமிழ் நெஞ்சம் கொண்ட அறிஞர். ஆகவே இவர்தம் தமிழ் வளர்ச்சி தமிழிலக்கியம், தமிழ் எழுத்துச் சீரமைப்பு ஆகிய துறைகளில் ஆர்வத்துடிப்புடன் பணியாற்றுவதாக அமைந்தது. கவிதை இயற்றுவதில் ஆர்வங் கொண்டவர். பொன்னி இதழ் இவரை 1950 இல் பாரதிதாசன் பரம்பரையின் கீழ் அறிமுகப்படுத்தியது. குலோத்துங்கன் என்ற புனை பெயரில் இவருடைய கவிதைகள் ஐந்து தொகுதிகளாகவும் சிலகவிதைகள் ஒலிப்பேழைகளாகவும் வெளிவந்துள்ளன.இவருடைய கவிதைகள் மரபுவழிப்பட்ட கவிதைகளேயாகும். பெரும்பாலும் இவர்தம் கவிதைகள் யாவும், அறிவியல் துறை தமிழில் வளர்ச்சிபெற வேண்டும். என்ற முற்போக்குக் கொள்கையுடையனவாகவே இருக்கும். வேறு நோக்கில் பாடப்பெற்ற பாடல்களும் உண்டு. முறையாகத் தமிழ் பயின்றவர் அல்லர்.ஆயினும் இவர் யாப்புப் பிசகாத அறுசீர், எண்சீர் விருத்தங்களையும், அழகிய புதிய நடைபயிலும் அகவல்களையும், சிந்து, கண்ணி போன்ற சந்த்ங்களையும் பாடியுள்ளார். மரபுவழி அமைந்த இவர்தம் கவிதைகளில் மரபுவழிப்பட்ட பண்டைய மரபுவழிக் கருத்துக்கள் வரும். அங்ங்ணம் வரும்போது புது மெருகுடன் புத்தொளி வீசி வரும். இவற்றிற்கு மேல் புத்தம் புதிய சிந்தைகள் புதுக்கோலங் கொண்டு புதியவடிவமைப்புடன் வருவது இவர்தம் கவிதைகளின் தனிச் சிறப்பாகும். சொல்லாட்சி, புதிய ஆக்கப் படைப்பு. புணர்ச்சி விதிகள் மாறாமை, யாப்புடன் பிணைந்த வாக்கிய அமைப்பு ஆகியவற்றில் கவிஞர் குலோத்துங்கன் கொண்டிருக்கும் கவனம்