பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 வாழும் கவிஞர்கள் இதிலும் தாம் சுவைத்த தமிழ்ச் சுவையைத் தமிழர் அல்லாத பிறரும் அனுபவிக்க வேண்டும் என்று கூறுகின்றார். இங்கும் தமிழரின் பண்டைப் புகழ் உலகிடைப் பரவ வேண்டும் என்ற ஏக்கத்தையும் ஆர்வத் துடிப்பையும் காண முடிகின்றது. கவிஞரின் உள்ளம் விரிவதை ஆறாண்டு இடைக்காலத்தில் காண முடிகின்றது. மனிதனின் வயது ஏற ஏற அனுபவத்தில் முதிர்கின்றான். அந்த அனுபவத்தின் முதிர்ச்சி அவனுடைய புற அகமனங்களில் எண்ணத்தில் சிந்தனையில் தாக்கம் ஆகாமல் இருக்க முடியாது. டாக்டர். வா.செ.கு ஓர் அறிவியல் அறிஞராதலின் உணர்ச்சியுடன் நின்று விடாமல், இப்புகழ் ஏன் பிற நாட்டாரால் பேசப் பெறவில்லை என்ற ஆய்வும் அவர்தம் உள் மனத்தைத் தொடுகின்றது. அதன் பயனாக உலகையும் தம்மையும் கூர்ந்து நோக்குகின்றார். பிற நாட்டார் தம் பழமையைப் படியாக்கிக் கொண்டு புதுமையில் முன்னேற்றப் பாதையில் செல்லும் முயற்சியை மேற்கொள்ளும் முயற்சியைக் காண்கின்றார். உலகம் சுற்றியவர் அல்லவா? நம் தமிழர்குறை அவர்தம் கவனத்திற்கு வருகின்றது.இவர்கள் பழமையைப் படியாக்கி மேலே முன்னேறாமல் அப்பழமையின் பெருமையையே திரும்பத் திரும்பப் பேசி இன்பங் காண்பதைக் குலோத்துங்கன் காணுங்கால் துயரம் அவரை ஆட்கொள்ளுகின்றது. அது பெருகவும் செய்கின்றது. இந்தத் துயர உணர்ச்சி அவர்தம் பற்பல பாடல்களில் பொங்கி வழிகின்றது. 1. போலித் தமிழ் வளர்ச்சி 1. பழம்பெருமை பேசுதல்: இந்தப் பண்பு இன்று எங்கணும் கோலோச்சி நிற்கின்றது. தமிழர்களில் பலர் தமிழ் வாழ்க என்பதனோடு மனநிறைவு எய்துகின்றனர். கடித முகப்பில் தமிழ் வாழ்க, இமயத்தின் எல்லை கண்ட எந்தமிழ் என்றும் வாழ்க என்பன போன்ற "பொன்மொழிகளை அச்சிட்டு வைத்துக் கொண்டு பார்த்துப் பார்த்து மகிழும் புலவர் கூட்டம், அரசியல் வாதிகள் கூட்டம் மலிந்து காணப்படுகின்றன. தமிழுணர்ச்சி வணிகப் பொருளாகி விட்டது. எங்கும் இதே போர்க்குரல் வளர்கதமிழ் வாழ்கதமிழ் என்பீர் கூடி வழுத்துவதால் தமிழ்வளர வசிட்ட ராநீர்? அளவிலது பழம்பெருமை புகழ்வி வையம்