பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா.செ. குழந்தைசாமி 甘。 7. புதிய சிந்தனை: பழந்தமிழர் எழு கடலில் சென்று வணிகர் கலம் ஒட்டியமை, சங்கம் கூடித் தமிழ் வளர்த்த பெருமை முதலியவற்றையெல்லாம் பெருமிதத்துடன் குறிப்பிட்டு விட்டு சூழ்ந்தமர்ந்து சிந்திப்பீர் வளர்ச்சி குன்றிச் சுடர்மடங்கிநிற்கின்றோம் உலக மன்றில் தாழ்ந்த இனம் உயர்ந்தமொழி சமைத்த தில்லை தானாக எம்மொழியும் வளர்ந்த தில்லை என்று விரித்துரைக்கின்றார்.திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பன்காவியம் போன்ற நூல்கள் மனிதனுக்கு வேண்டிய தேவைகளையெல்லாம் முற்றுப் பெறச் செய்ய முடியுமா? என்று வினவுகின்றார். செகப்பிரியர் நாடகங்கள், மில்ட்டனின் காவியம் மட்டிலுமா ஆங்கிலத்தின் பெருமைக்குக் காரணங்கள்? கருத்துலகப் பூம்பொழிலின் விரிவில் கோடி கலைமலர்தல் காணிரோ அவைய னைத்தும் திருத்தமிழில் கண்டீரோ அனு:யு கத்தைச் செந்தமிழில் பார்த்திரோ மொழிவ ளர்க்க மருத்துவரின் பொறிவலரின் அறிவி யல்துல் "வல்லுநரின் துணைதேட வழிசெய் தீரேர என வினாக்களை அள்ளி வீசுகின்றார். தமிழுக்கு எவை எவை தேவை என்பதை, ஊசிசெயும் சிறுதொழிலின் நுட்பம் கூற ஒருகோ நூல்வேண்டும் தமிழில் இந்தக் காசினியில் இன்றுவரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெலாம் தமிழில் எண்ணிப் பேசிமகிழ் நிலைவேண்டும், விண்ணை எட்டிப் பிடிக்கிறது மனிதஇனம், முன்னோர் செல்வ ஆசியிலே வாழ்கின்றோம் கால மெல்லாம் அதன்பெருமை பேசுகின்றோம் அவல மன்றோ. என்று பட்டியலிட்டுக் காட்டுகின்றார். ஆயினும் பண்டைத் தமிழின்பெருமை, தமிழரின் பெருமை ஆகியவற்றையும் அற்புதமாகப் பேசி மகிழ்கின்றார். 8. மாற்றம் தேவை . மாற்றமே அடையாத நிலை பிணநிலை என்பது கவிஞர் உலகுக்கு எடுத்தோதவிரும்பும் கருத்து.