பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா.செ. குழந்தை சாமி 147 நவம்எ னப்படும் கிரகம் யாவையும் நண்பர் ஆகலாம் ஒன்று சேரலாம் தவமி ருப்பினும் தமிழர் ஒன்றிஒர் தலைமை ஒப்பிய சசிதை ஏதடா? பாலை வெண்மணல் சோலை ஆகலாம் பசுமை போர்த்திய பழமை தோன்றலாம் வாலை நற்றமிழ் மாத்தர் சேர்ந்துதம் வளம்பெ ருக்கிய சரிதம் ஏதடா? சேரசோழபாண்டியர்களின் வரலாற்றில் ஒற்றுமையின்மைக்குத் தமிழகச் சரித்திரமே சான்று. மாறுதலை அடிநாதமாகக் கொண்டது வளர்ச்சிமுறை. காலத்திற்கேற்ற கோலமாற்றம் ஏற்கப் பெறல் வேண்டும். இதனை ஏற்காதவர்களைப் பற்றிக் கவிஞர் குலோத்துங்கன் மாற்றம் என்பது வாழ்வின் மூச்செனும் தோற்றமும் ஏற்காச் திருத்துவ தாயின் சங்கம் வளர்த்த தமிழையே மீண்டும் இங்குக் காண்பதே ஏற்குவம் என்பார், காலம் என்பது கடந்த பாதையில் ஞாலம் திரும்பிநடப்பது காண்கிலம். வினைசெய முனைந்து மேற்செலும் முடிவுடன் அனைவரும் திரளஒர் அறிக்கை கானினும் எழுதிய அனைத்தும் ஏற்பினும் கருத்து முழுமையும் ஒருவழிமுறையுடைத் தாயினும் காற்புள்ளியில்யாம் கருத்து மாறினம் ஏற்பதற் கிலையென எழுந்து செல்லுவர், ஒற்றுமை யறியாது உளுத்த இனமடா வெற்றுரை வெற்றுரை வெற்றுரை வீரர் விதியே விதியே தமிழச் சாதியை என்செயக் கருதி இருக்கின்றாயடா என்று கூறி வருந்துவது நம் உள்ளத்தைத் தொடுகின்றது. இ தமிழினத்தைத் தட்டி எழுப்புமா? காற்றில் கலந்த கற்பூரமாகுமா என்பக்ை காலந்தான் காட்ட வேண்டும். 3. பெண்ணியம் பற்றி பெண்ணினத்தைக் கீழ்மைப் படுத்திய நிலையை எண்ணித் துயருறுகின்றார். கவிஞர் சங்க இலக்கியங்கள் பெண்ணுக்குப் பெருமை சேர்த்தன. பிற்காலத்தில் கம்பன் பெண்ணுக்குப் பெருமை தந்தான். சூர்ப்பனகையின் வாக்காக,