பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா.செ. குழந்தை சாமி #27 பெருமகன், பெரிய வன்றிப் பிறவெதும் கண்டு தாங்கும் பொறுமையொன்றில்லோன் வாழ்வின் புனிதங்கள் தசையும் நாரும் உருவமும் பெற்ற தன்ன உத்தமன் புத்தன் சொன்ன தருமமும் சமணர் அன்பின் தன்மையும் பக்தி ஞானம் கருமமும் பிரிந்து ரைத்த கண்னனின் வழியும் தொன்மை மருவிய தமிழி னத்தின் மறைகளும் அறிந்தோன் மற்றும் பாரதம் தந்த யாவும் பயின்றவன் பயின்ற வற்றின் சாரமும் சார மற்ற சக்கையும் தெளிந்து தேர்ந்த காரணன், உணர்வும் ஆய்வும் கலந்துநின் றுலகம் கண்ட பூரண மனிதன் இந்தப் புவிக்கொரு புதல்வ னம்மா நிகரென அவனை ஒத்து நின்றவர் அரிதே மண்ணில் மகனென அவன்நி லைக்கு வளர்ந்தவர் அரிதே காலம் உகமெனச்சூல்இருந்திவ் வுலகினுக்களித்த தெய்வப் புகழினன் புகழ னைத்தும் பூணுதற் கொருவ னம்மா! இவை அண்ணல் நேருவை அற்புதமாக அறிமுகம் செய்யும் உயர்ந்த கவிதைகள் ஆகும். 5. குன்றக்குடியடிகளார். " புதுயுகத் துறவி என்ற தலைப்பில் வருவது. சமயமொடு தமிழ்வாழத் தமிழர் வாழத் தாளாது தளராது தொண்டு செய்து இமயமென நின்றதமிழ் ஞானி ஒய்ந்தான் %. 3, இனியதமிழ் வாழும்வரை இவனும் வாழ்வான்.