பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மி வா.செ. குழந்தை சா #29 மரபுவழிக் கவிதையினி வாழ தென்போர் மழலைமொழி ஒருசிலரை வருத்தக் கண்டோம் பரவுமணற் கடற்கரையில் ஊற்றெ டுப்போர் பரவையினி வற்றுமெனில் பகைப்ப துண்டோ சொற்சிலம்பங்கள் மரபிலும் உண்டு, புதியதிலும் உண்டு. நமக்கு உளக்கோட்டம் இருந்தால் இரண்டிலும் உண்மை காண முடியாது. டார்வின் சித்தாந்தப்படி இரண்டிலும் தகுதியானவை மட்டிலும் வாழும். மற்றவை வீழும். ஜாங்கிரி, ஜிலேபி, இலட்டு போன்ற இனிப்பு வகைகளும் வேண்டும்.இவை அமர்ந்து சுவைக்க வேண்டியவை. மிளகு மிட்டாய், சாக்லேட்டு தினுசுகள் இவற்றை அமர்ந்து கொண்டும் சுவைக்கலாம், நடையாடிக் கொண்டும் சுவைக்கலாம். இவைதாம் மரவும் புதிதும். "நிதமுமா முழுநிலவு" என்ற தலைப்பில் வரும் கவிதைகள் சிறப்பாகக் கவிஞர்க்கும் பொதுவாக எல்லோரும் சிந்திக்க வேண்டியவைகளாக அமைகின்றன. வேரற்ற பொருளன்று கவிதை செய்யும் வினையற்ற இடமன்று கவிஞர் வையம் ஊசற்ற நாடோடி வாழ்க்கை வேறு உலகத்தின் குடிமகனாய் உயர்தல் வேறு. எரிமலைகள், இடி, மின்னல் பூகம் பம்என் றெழுதுவது புரட்சியல, எழுத்து பொங்கி விரிகின்ற ஆவேசம் தெஞ்சி னின்று வெடிக்கின்ற சொல்வேறு, வெறுஞ்சொல் வேறு எரிக்கின்ற தியிருக்கும், நெடிய வெற்பை இடிக்கின்ற வெடியிருக்கும் விழுதும் வேரும் பறிக்கின்ற புயலிருக்கும், இன்ப வெள்ளம் பாய்ச்சுகின்ற ஊற்றிருக்கும் கவிதைச் சொல்லில் மின்கம்பி செய்திசொலும், இரும்பில் காந்தம் விசைஊட்டும், மின்சாரம் செம்பிற் செய்த நுண்கம்பிக் காற்றல்தரும், சொல்லின் சக்தி நுவல்வார்தம் உணர்வுகளின் நுழைவே யன்றோ இவற்றைப் பன்முறை படித்து அநுபவித்தால் உண்மை தட்டுப்படும். 2. யாப்பமைதிகள்: இருக்கை வாடகை தந்து தமிழைக் கல்லூரிகளில் முறையாகப் பயிலாதவராயினும், இல்லத்தில் ஓரளவு யாப்பிலக்கணத்தைப் பயின்றிருத்தல் கூடும். இந்த அறிவை, பாரதியார்.