பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. டாக்டர். இரா. திருமுருகன் புதுவை மாநிலம் புதுச்சேரி நமக்கு ஈந்த மரபுநிலைக் கவிஞர் 1929). இவர் ஒரு பிறவிக் கவிஞர். தமிழ்ப் புலமையோடு இசைப்புலமையும் வாய்க்கப் பெற்றவர். இவர் தமிழில் எம்.ஏ.எம்.எட். பி.எச்டி பட்டங்களும், பிரெஞ்சு மொழியில் மொழிப் பட்டயமும். மொழியியல் சான்றிதழ்களும் பெற்றவர். முனைவர் பட்டத்துக்கான இவரது نامهنغاريايي பொருள், சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம் என்பது. கடின உழைப்பால் உடல்நலம் குன்றியது. எனவே பணி ஓய்வு பெற்றார். தமிழ் முருகன் இத்திருமுருகனைத் தமிழ் வளர்ப்பதற்காகவே பிழைக்க வைத்திருக்கின்றான். இலக்கணத்தில் ஆழ்ந்த புலமை மிக்கவர். இத்தகைய சிறந்த அறிஞரின் பணி, மேனிலைப் பள்ளிகளிலேயே கழிந்தது. ஒய்வு பெற்ற பிறகு புதுவை அரசுக் கல்வித்துறை தமிழ் வளர்ச்சிச் சிறகத்தில் சில ஆண்டுகள் தனிப்பணி அலுவலராகப் பணியேற்றுச் சிறப்பாகப் பணியாற்றி நற்புகழ் பெற்றவர். இறுதியில் பாரதியார் வாழ்ந்த இடமாதலாலும், பாவேந்தர் பிறந்து வளர்ந்த இடமாதலாலும், அந்தப் புதுவை மண்ணில் பிறந்த காரணத்தால் இவரும் பிறவியிலேயே கவிஞராகத் திகழ்கின்றார், பாவேந்தர் மரபில் தோன்றிய முதற் கவிஞர் முதலாவதான கவிஞரும் கூட இவர் பல காலங்களில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடிய கவிதைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. கம்பனை ஆழ்ந்து கற்று. கம்பனில் வண்ணங்கள் என்ற ஆய்வு நூலை வெளியிட்ட பெருமகன். பாவேந்தர் போலவே இவரும் திராவிடக் கொள்கையினர். கடந்த இருபது ஆண்டுகளாக என் அரிய நண்பர். இனி இவருடைய கவிதைகளை நோக்குவோம். பல்வேறு காலங்களில் பல்வேறு பாட்டரங்குகளில் பங்கு பெற்றுப் பாடிய கவிதைகள் இதழ்களில் வெளிவந்த சில கவிதைகள் ஆகியன நூல்களாய் வெளி வந்துள்ளன. ஒட்டைப் புல்லாங்குழல் 2 பன்னீர் மழை என்ற இரண்டு பெயர்களில் வெளிவந்துள்ளன. 1. தமிழுணர்வு இவர்தம் பாடல்களில் இழையோடி இருப்பது இவர்தம் தமிழுணர்வு ஆகும். வான்தலை கொட்கும் வளிதவழ் காலத்து வடக்கண்தணிகை.தென்கண் குமரி. குடக்கண்சேரலம்.குணக்கண் புணரி ஆயிடை