பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3; வாழுக் கவிஞர்கள் த விரும்புவார் பலரும் தமக்குத் றியவாறெலாம் எழுதி இதழ்கட்கு அனுப்பலாம். பெரிய பெயர் க் கெடுக்கலாம், அவர்களை ஏனென்று கேட்பதற்கு ஒருவரும் இலார் என்று கூறியவர். மேலும் கூறுவார். பாப்புனை இற்றைப் பாவலர் பலரும் யாப்பிலக் கணம்எனில் யாதென அறியார், எழுத்திலக் கணத்தில் இம்மியும் அறியார், அசை எனில் அசைவர், சீர்' எனில் சிறுவர் 'தனை' எனில் கையைத் தலைமேல் வைப்பர், அடி'எனில் கவிழ்ந்தே அடியினை நோக்குவர் தொடை எனில் எங்கே துடைத்தி..? என்பர். தொல்காப்பி யமே சொல்லக் கேள்விதான் என்று அவர்களின் இலக்கண அறிவை விளக்கமாகக் கூறியவர் இலக்கிய அறிவையும் கழி என்று காட்டி அவர்கள் எழுதுவதைப் பற்றி எடுத்தியம்புவார். எதுவே ஆட எதுவே கண்ணுற். றதுவாய்த் தானும் ஆடிய கதைபோல் என்னவோ காண்குவர் என்னவோ நினைகுவர் கான மயிலாடி- மூதுரை நினைந்து சொல்தயம் பொருள்தயம் தொடைநயம் இன்றி என்னவோ எழுதுவர் இதுவே செய்யுளென் றிதழுக் கனுப்புவர் இதழா சிரியரோ அதனைக் காண்டார் அவர்க்கென்ன தெரியும் வீறு முதிரான் விளைத்த புணர்ச்சியில் பேறு முதிராள் பெற்ற குழவிபோல் டான்லும் தோற்றம் மேவிடும், அதனை ஒவச் செய்தியால் ஒப்பனை செய்தே அச்சுக் குதிரையில் அமர்த்தி நாடெலாம் மெச்ச விடுப்பர் வேதனை. என்று ஓலமிட்டு அன்னையே முத்தமிழ் என்று போற்றும் நின்னை வளர்க்கும் அழகிது என்று பெருமூச்சு விடுவார். காலம் என்ற தலைப்பில் தம்காலத்துத் தமிழின இழிநிலையைக் கண்டு இரங்கி வேதனைப்படுகின்றார் தமிழணர்வு மிக்க கவிஞர் இரா. திருமுருகன். முருகன் தமிழ்க் கடவுள் அல்லவா?