பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138. வாழும் கவிஞர்கள் உள்ளசெல் வத்துளே செல்வமாய் ஒதுவதும் உயர்அருள் என்று தைத்தேன் பல:ற்றும் விட்டொழித்தே உடலும்வேண்டாமையைப் பகர்விழுச் செல்வம் என்றேன் பனுவல்பல கற்கவரு கல்விதான் உலகிலே பழுதிலாச் செல்வம் என்றேன் தலையான தென்றுயான் ஒன்றையே கூறியது தன்னைநீ உணர விலையோ தன்னிக சிலாததோர் கேள்வியே உலகினில் தலையான செல்வம் என்றேன் அலகிலாப் பலநூல்கள் கற்றலின் கேட்டலே அறிவுமிகு தெறினன் பர்காண் ஆதலால் செல்வமாம் யாதினும் தலையானது அது என்ப தறிக மகனே

இதில் கேள்வியின் சிறப்பை அற்புதமாகக் காட்டியுள்ளார் கவிஞர். ஒற்றுமையால் எல்லாம் இயலும் என்ற கருத்தை வலியுறுத்துவதாக கை கோத்தால் என்ற தலைப்பில் மூன்று பாடல்கள் உள்ளன. மூன்றும் அற்புதமானவை. ஒரு பன்முகம் காட்டி போல் (Kale 5ே:pேe, பல செய்திகளை ஓரிடத்தில் காட்டுபவை. தனிபரங்கள் கைகோத்தால் தோப்பே ஆகும் தழை இலைகள் கைகோத்தால் நிழலே ஆகும் பனித்துகள்கள் கைகோத்தால் பாறை ஆகும் பலகற்கள் கைகோத்தால் சுவரே ஆகும் தாள்கள் பல கைகோத்தால் மனிதமணம் கைகோத்தால் உலகில்ஆக மாட்டாத செயலுண்டோ காட்டு விரே? சர்ந்தவிழில் கைகோத்தால் கூரை ஆகும்