பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+48 வாழும் கவிஞர்கள் சமணத்தார் தலிந்து போன சமயத்தில் நாட்டில் எந்தச் சமயத்தார் பிழைசெய் தாலும் சமணர்மேல் பழிபோட் டார்கள் தமையாளும் அரசும் நாடும் தடுதிலை தவறிப் போனால் இமயத்தைக் கூடச் சின்ன எலிகளே விழுங்கும் அம்மா. என்ற இறுதிப் பாடலில் நம்மை ஆளும் அரசுக்கும் ஓர் எச்சரிக்கையும் தருவது போலக் கூறியுள்ளது சிந்திக்கத் தக்கதாக உள்ளது. இவர்தம் பாடல்களைப் பாடிய வயது நிலைகளை ஒப்பிட்டு ஆய்ந்தால் கவிஞரின் மனப்பக்குவ முதிர்ச்சிக்கேற்பவும், அறிவு முதிர்ச்சிக்கேற்பவும் பாடல்கள் தரத்தாலும் உயர்ந்து விளங்குவதைக் காணலாம். இத்துடன் இவர் பற்றிய கவிதைச் சிறப்பை நிறைவு செய்கிறேன்.