பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் ஆ. பழநி #57 திருமண வீட்டு வாயில் தெருவிலே வருக என்பேன் நறுமண மாலையில் தான் நகராக இணைந்தி குப்பேன் உறுமணம் கமழச் செய்த உண்டியில் பொறியல் கூட்டசய்ப் பெருமணம் செய்தி ருப்பேன் பத்தியுள் இலையு மாவேன் திருமணப் பந்தலில் கட்டப் பெற்றுத் தான்தான் வரவேற்பளிக்கும் முதல் ஆள் என்றும், மணமக்கள் கழுத்தில் தாங்கும் மாலையில் நாராக இணைந்திருக்கும் பேறினைப் பெற்றிருப்பதாகவும், உண்ணும் உணவிலும் பல்வேறு வடிவங்களில் தலைகாட்டுவதையும் கூறி வாழை பெருமைப்படுகின்றது. நைந்து போன பிற பொருள்களைப் போல் தான் ஒதுக்கப் பெறாமல், தோலும் உள்ளுறைப் பொருளும் ஒன்றாய் நைந்து நைந்து உழன்ற போதும் யாவரும் விரும்பும் பஞ்சாமிர்த உருவில் காட்சியளிக்கும் பெருமையும் தனக்குண்டு என்கின்றது. வாழைப்பழம், மேலும் கூறுகின்றது. பந்தியுள் இனிய கூழைப் பருகிடத் தொன்னை யுத்தான், வந்தவர் விடைகொள் ளுங்கால் வழங்கிடப் பழமாய் நிற்பேன் இந்தஇப் பிறவி எல்லாம் மானிடர் தமக்கே ஈத்தேன் அந்தோநீ அளியன் என்றே இரங்குவார் ஆரும் காணேன். என்று என்பும் உரியர் பிறர்க்கு என்றதன் நிலையினை எண்ணி இரங்குவார் ஒருவரும் இல்லையே என்று வருந்துகின்றது. மக்களுக்குள் வேற்றுமை இருப்பதைப்போல் தனக்கும் உண்டு என்கின்றது வாழை, சிறுமலை கிழவோன் உண்டு செவ்வாழை மேலோன் உண்டு குறுமதிப் பேயன் உண்டு கொள்பச்சை நாடான் உண்டு குருவொளிர் பூவன் உண்டு குமரிதேந் திரனும் உண்டு பெருகிய சாதி யாலே பிளவுகள் எமக்கும் உண்டு