பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் ஆ. பழநி, 453 மூவர்க்கும் முன்தோன்றி முளைத்ததமிழ் விளைத்தகவை முழுதும் வானத் தேவர்க்கும் ஊட்டுதற்குச் சென்றனையோ வாசகத்தின் தேனெ டுத்து தேவர்க்கும் வாசகத்தேன் ஊட்டுதற்குச் சென்றிலையேல் தீரா மம்மர் யாவர்க்கும் வழங்குவையோ? இனியசெயும் நாகரிக இயல்பின் மிக்கோய்! அருந்தேனை அமுதத்தை ஆக்குபவன் என்பதனை அறிந்த கூற்றம் விருத்தமுதம் அருந்திடவும் விவில்லா திலைபெறவும் விழைந்தான் போலும் ! விருந்தமுதம் அருந்திடவும் விவில்லா திலைபெறவும் விழைந்த தாற்றான் பெருத்துணையா உனைக்கொண்டு தன்னலத்தாற் பிழைசெய்து பெயர்த்தான் போலும் ! திங்கள்தேக் காரைமகள் திருதுதலின் பொட்டிழந்தான் கலையின்தெய்வம் துய்யமகள் கைம்மை துய்த்தான் துங்கமணி நளிைழக்கத் துய்யமகள் கைம்மையுறத் தோன்று மாயின் சங்கமுறை எம்மவரைச் சலித்ததுயர் எந்தவனம் சாற்று கேனே இவை இராய.சொ.வைப் பற்றிய கையறுநிலைப் பாடல்கள். எல்லாப் பாடல்களுமே நெஞ்சு வெடிக்கச் செய்யும் பாங்குடையவை. கங்கைஇங்கு பாயவில்லை காவிரியும் காரைநகர் காண வில்லை பொங்குபெருந் தொழில்வளங்கள் பூக்கவில்லை என்றாலும் இந்தப் பூமி தங்குபெரும் நலமெல்லாம் தான்பெற்ற தெவ்வாறு? அழகப்பன்றன் செங்கைபொழி கொடையாறு பெருகியதன் செழிப்பன்றோ இச்செ Nப்பு! கொடைவிளங்கும் இவன்கையில் குலம்விளங்கும் வாணிகத்தில் கொள்கைசான்ற நடைவிளங்கும் வாழ்க்கையிலே நல்லறிவு விளங்குமவன் செயலில் நேர்ந்த