பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#68 வாழும் கவிஞர்கள் நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்? குறள் 379) என்ற கருத்தும் இருவினையொப்பு, மலபரிபாகம் என்ற சைவ சித்தாந்தக் கருத்தும் பொதிந்து கிடப்பக் காண்கின்றோம். கவிஞன் கற்பனையுலகில் வாழ்பவன். கற்பனையில் திளைப்பவன். திரு. ராஜா என் கனவுகள் என்ற தலைப்பில் என்கன வெல்லாம்இசைப்பேனாகில் மன்பதைவியக்கும் மாகாவியமாம் எனத் தொடங்கி கடலில் செலுமரக்கலமதொப்பவே-கனாக் கடலில் என்மனக்கலமும் செல்லுமே! திலவின் ஒளியில் நீந்தி நீந்தி மலருள்துழையும் வண்டா கிடுவேன் ! வானில் நீந்தி மழையில் அமர்ந்துவிண் மீனாம் பூக்கள் மெல்லப் பறிப்பேன்! கற்பக மலரைக் கையில் கொண்டே அற்புத இன்பங்கள் அதுபவித் திடுவேன்! இயற்கை அழகுகள் எல்லாம் கண்டே மயங்கிக்கிடப்டேன் மண்ணை மறப்பேன் எனக் கூறுகிறார். இத்தலைப்பில் உள்ள 5 கவிதைகளில் சில மட்டும் காட்டப் பெற்றன. ஜாங்கிரிக் கடையில் புகுந்தால் எல்லாவற்றையும் தின்றுவிடும் ஆசையிருக்கும் தின்ன முடியுமா? அது போலவே இங்கும். நான் என்ற தலைப்பில் உள்ள நான்கு கவிதைகளில் காலக் கதிரோன் காட்டும் அழகில் கலந்து கிடப்பதும் நானே காலமும் இடமும் கடந்தொளிர் தத்துவக் கடவு னாவதும் நானே என்ற பாடற் பகுதி தேசியகவி பாரதியின் எதிரொலியாக நான் தானாக மாறுகின்றது. ஆணபொருள் அனைத்திலும் ஒன்றாய் அறிவாய் விளங்குமுதற் சோதிநான்