பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 வாழும் கவிஞர்கள் சன்னல்களே வெளிச்சத்தின் முகப்பு கீழைச் செவ்வானம் பகலவனின் முகப்பு மங்கைக் கன்னத்து முத்திரைகள் காதல் வாழ்வுக் கற்கண்டுக் காவியத்தின் முகப்பு சோழப் பொன்மகளின் காவியமாம் சிலம்போ துளய புகழ்பாடும் நெறிக்கற்பின் முகப்பே யன்றோ கல்வெட்டே வரலாற்றின் முகப்பு ஒடும் கடிகாரம் காலத்தின் முகப்பு நல்ல நெல்விளைச்சல் வளவாழ்வின் முகப்பு ஒயா நேர்உழைப்பே வெற்றிக்கு முகப்பு ஆழ்ந்த கல்வியொன்றே அறிவுக்கு முகப்பு பாழும் கர்வந்தான் வீழ்ச்சிக்கே முகப்பு நீண்ட தொல்காப்பி யப்பெருநூல் தமிழர் வாழ்வின் சுடர்க்கொள்கை முகப்பென்றால் தவறா உண்டு. மாம்பூக்கள் இளவேனில் முகப்பு சூடும் மங்கலநாண் இல்வாழ்வின் முகப்பு நின்று கூம்பும்கை அடக்கத்தின் முகப்பு வீழும் குளிர்அருகி மலைப்பெண்ணின் முகப்பு வந்து தேம்புகின்ற விழிநீரோ நெஞ்சத் துள்ளே தேக்கிவைத்த துயரத்தின் முகப்பு நாளும் நாம்போற்றும் திருக்குறளோ அகிலத் திற்கே நமைக்காட்டும் எழிற்சட்ட முகப்பே என்பேன் இந்தப் பாடல்களைப் படைக்கும போது கவிஞன் சிந்தனை நிகழ்ச்சிகளைத் திரட்டுவதற்கு என்ன பாடு பட்டிருக்க வேண்டும் என்பதை நினைத்தால் கவிஞரின் சிந்தனை கொடு முடியை எட்டுவதைக் காணலாம். 3. பொங்கல் : இச்சொல் பொங்கல் பண்டிகையைக் குறிக்க்வில்லை எனத் தோன்றுகின்றது. கவிதையில் குறிப்பிடப் பெறும் ஒவ்வொரு நபருக்கும் அல்லது பொருளுக்கும் பொங்கிவரும் எழுச்சியையே குறிப்பதாகத் தோன்றுகின்றது. பாடல்கள் நயச்செறிவுடன் திகழ்பவை. இங்கு மூன்று பாடலையும் காட்டுவேன். ஏடெடுத்த கவிஞருக்கோ கற்பனையே பொங்கல் இசையெடுத்த குயிலுக்கோ இளவேனில் பொங்கல் பாடெடுத்த உழவனுக்கோ பயிர்ச்சிரிப்பே பொங்கல் பசியெடுத்த வறிஞனுக்கோ சிறுகவளம் பொங்கல் நாடெடுத்த சோழனுக்கோ புகழ்ப்பரணி பொங்கல்