பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. வேழவேந்தன் 203 நரம்பெடுத்த யாழோசை செவியருந்தும் பொங்கல் காடெடுத்த அருவியெலாம் ஒவியனின் பொங்கல் கண்ணெடுத்த காதலுக்கோ கனவுகளே பொங்கல் செங்கதிரின் ஊர்வலமே தாமரைககுப் பொங்கல் சீதளனத்து நிலவுவழி அல்லிக்கே பொங்கல் நுங்கிதழோ அவனுக்கே அவள்வைத்த பொங்கல் நுண்ணிடையாள் அவளுக்கோ குழவிமொழி பொங்கல் தெங்கிளநீர் கோடைதரும் தெவிட்டாத பொங்கல் தேனடையோ ஈக்கூட்டம் ஆக்கிவைத்த பொங்கல் மங்காத குறளமும் சான்றோர்க்குப் பொங்கல் மழைமேக அழகின்உலா கழனிகட்குப் பொங்கல் இப்பாடல்களைப் படிக்கும் நாம் கவிஞரின் திறனை எண்ணி வியக்கின்றாம். 4. கல்வி கல்வியைப் பற்றிய கவிஞரின் கருத்து சிறப்பாக அமைகின்றது. அவர் கூறுவார் எந்நாடு கல்வியிலே ஏற்றம் பெறுகிறதோ அந்நாடே முன்னேற்றம் அடையும் வளம்பெற்றே என்று. இந்தக் கல்வி யாருக்கு? மனிதனுக்கு, காரணம் கூறுவார். மனிதன் ஒன்றே சிந்திக்கும் விலங்கு, வாழும் மாடுகட்கும் ஆடுகட்கும் அதுதான் உண்டா? இல்லை. இந்த இயல்பு கொண்டே மண்ணகத்து விலங்குகளை அடிமை கொண்டான். மனிதன் மட்டிலும் தன் மூதாதையரின் அநுபவங் களையெல்லாம் நூல்கள் மூலம் சேமித்து வைத்துள்ளான். அதனைப் பின்வருவோர் அறிந்து கொள்வதுதான் கல்வியென்பது. மனிதனது மூளையொன்றே இதனை அறிந்து கொள்ளும் திறனையுடையது. அதுவொன்றே சிந்திக்கும் ஆற்றலையும் உடையது. இதனை விளக்கும் போக்கில் கவிஞர் . வானகத்தில் மின்னல்ஒளி மழையைச் சேர்க்கும் வையகத்துப் புன்னகையோ மகிழ்ச்சி சேர்க்கும் தேனிதழாள் காதல்விழி மயக்கம் சேர்க்கும் தினைக்காட்சி கிளிகளுக்கோ களிப்பைச் சேர்க்கும் கானகத்தின் அகில்தோப்பு மணத்தைச் சேர்க்கும் காவிரியின் நடைப்போக்கோ வளமை சேர்க்கும் சேனைகளின் மானவெறி வெற்றி சேர்க்கும் சிந்தனையே மனிதனுக்குப் பெருமை சேர்க்கும்