பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 வாழும் கவிஞர்கள் என்ற கவிதையில் தமக்கே உரிய முறையில் விளக்குவார். இன்னம் அவர் கூறுவது, படிப்பறிவே மூலதனம். பட்டறிவும் சேர்ந்தால் அந்த அறிவு மேலும் வளரும். இருபதாம் நூற்றாண்டில் எழுத்தறிவு இல்லாமல் இருப்பது வெட்கம். கல்லாமை எனும்ஆமை காலூன்றி அகம்புகுந்தால் இல்லாமை எனும்ஆமை இல்லத்தில் உடன்துழையும் என்ற உணர்வுடன் விளக்குவார். கல்விக்குக் கருவியாக இருப்பவை நூல்கள். புத்தகம் என்றால்என்ன எத்தனையோ புதுப்பொருளை நித்தம் காட்டுகின்ற நெடுமாயக் கண்ணாடி என்ற நூலின் தன்மையை விளக்குவார். கால்கள் இலையெனினும் கண்ணால் உலகறிவோம் நூல்கள் இலையென்றால் நுட்பமிகும் அறிவேது? என்று மேலும் விளக்குவார். சிறு வயதில் கல்வி கற்க வாய்ப்பில்லாது போயினும் அறுபதிலும் படிப்பதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக முதியோர் கல்வித் திட்டம், தொலைதூரக் கல்வித் திட்டம் என்பவற்றைச் சொல்லலாம். கல்விக்கு வயதேது? கற்பதற்கும் நாளேது? பொதுஅறிவை நாட்டுதற்கே புத்த கங்கள் மதிவளர்ச்சி நாம்பெற்றால் நிதிவந்து குவியாதா? அறிவியல் கல்வியினால் அற்புதங்களைப் படைக்கலாம் என்று அடித்துச் சொல்லுவார். "நூல்களே நூல்களே' என்ற தலைப்பில் ஒரு கவிதை நூல்களைப் பற்றி அற்புதமாகப் பேசுகின்றது. நூல்களெனும் நண்பர்களே ! உலகைக் காட்டும் நுணுக்கமிகு சன்னல்களே காலத் தேரின் கால்வழியின் சுவடுகளைப் படமாய் ஆக்கிக் கண்முன்னால் திரையிட்டுக் காட்டு கின்றீர் வால்அறிவு பெறவேண்டின் நூல்க ளேஉம் மடியினிலே நாங்களெலாம் முழ்க வேண்டும். நூல்கள் சேமித்து வைக்கப்பெறும் இடம் நூலகம். பள்ளிக்கும் கல்லூரிக்கும் இதயம் போன்றது. இதிலுள்ள நூல்கள் இருப்பவரையும் அறிமுகம் செய்யும், இல்லாத வரையும் அறிமுகம் செய்யும். கவிஞர் வேழ வேந்தன்,