பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. வேழவேந்தன் 205 என்றைக்கோ செத்தவரை எங்கள் முன்னாள் - எழுப்பிவந்து நிறுத்திவைத்துப் பேசவைப்பீர் என்றைக்கோ நிலவினில்யாம் உலவப் போகும் 饿 எழிற்கதையைச் சுவையுடனே எடுத்துச் சொல்வி என்றென்றும் அறிவுமணம் வீசு கின்ற ஏடுகளே உங்களுக்கு மரணம் உண்டா? என்று கூறுவர். நூலகமே உமைத்திரும்பிப் பார்த்து விட்டால் நொடிப்போதில் திமிர்வாதம் அடங்கிப் போகும் காலமெலாம் அழியாத கவிதைக் காட்டைக் கண்முன்னே வளர்க்கின்ற கழனி நீங்கள் என்பதாக நூலும் நூலகமும் கல்வியை வளர்க்கும் கழனியாகும் என்பது கவிஞர் வலியுறுத்தும் உண்மை ஆகும். தந்தை பெரியார் வழி நடக்கும் பாவேந்தர் வழிவந்தவராதலால் கவிஞர் மூடநம்பிக்கைகளை அகற்ற வேண்டும் என்று பல இடங்களில் பேசுகின்றார். அறியாமையால் சாதிக் கொடுமை நிலவுகின்றது. பகுத்தறிவுச் சமுதாயம் உருவாகும் நாளை எதிர் நோக்குகின்றார். செட்டிமகள் செட்டியையே மணக்க வேண்டும் தேவருக்கும் பிள்ளைக்கும் உறவா என்றே கொட்டிவரும் சாதித்தேள் கொடுக்கை எல்லாம் கூறிட்டு நெருப்புவைத்தே சாம்ப லாக்கிப் பொட்டுக்கும் சாதிஎன்ற சொல்லே இல்லை பொல்லாத தமிழினம் தான் ஒன்றே என்றும் பட்டான கருத்திங்கே நிலைத்தி டாதா? என்ற கவிதையில் இந்த எதிர்பார்ப்பைக் காணலாம். இந்த உலகைப் படைத்தவன் ஒருவன் உண்டு, அவன்தான் கடவுள் என்ற கொள்கை அனைவருக்கும் பொதுவானது. சமயம் கண்ட பெரியோர்கள் அனைவருடைய கொள்கைகளும் பின் வந்த குருக்கள்மார்களால் கெட்டு விட்டது. கொள்கை வேறாகவும் நடைமுறை வேறாகவும் உள்ளது. தாயின்றி ஏழ்மையிலே நீந்தும் பிள்ளை தவளையைப்போல் பாலுக்குக் கதறும் போது வாய்பேசாச் சிலைக்குப்போய் தவலைப் பாலால் மறவாமல் அபிடேகம் செய்யும் முட்டாள் ! தீயசெயல் ஒயாதா? மைல்கல் லுக்கும் திருநீறும் குங்குமமும் பூசிப்பூசி விட்டால்