பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 வாழும் கவிஞர்கள் செல்வர் பலபேரால் செழித்தோங்கி வளர்ந்தவன்நான் கல்வி மலையின் கழுத்தேறி நிற்பவன்நான் கையில் ஒருசட்டி காலில் செருப்பில்லை மெய்யில் கிழிசட்டை மிதிவண்டி எனக்கில்லை கால்நடைகள் மேய்ந்துவரும் காட்டுவழிப் பாதையிலே கால்நடையாய் வந்து கல்லூரி கண்டவன்நான் நடையை வெறுக்காமல் நானன்று கற்றதனால் நடையில் உயர்தமிழை நாள்தோறும் பாடுகின்றேன் என்பது கவிஞர் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. நடையுடை பாவனையில் நடத்தும் தொழில்வகையில் அடையாளம் தெரியாமல் ஆடவர்கள் மாறிடினும் மாறாமல் செட்டிகளால் மாற்ற முடியாமல் யாரும் இனத்தியல்பை அறியும் வகைவாழும் ஆச்சிகளை வணங்குகின்றேன் அவரிடத்தில் சிக்குண்ட பூச்சிகளாய் வாழ்ந்தவரும் புள்ளிகளை வணங்குகின்றேன் என்று கூறியவர் தம் நிலையையும் விளக்குகிறார். அழகம்மை என்மனைவி அகத்தில் இருந்தாலும் பழகிப் போய் விட்டதனால் பணிவாய் வணங்குகிறேன் நகரத்தை விற்றாலும் தன்மனைவி சொற்கேட்டல் நகரத்தார் பண்பாடாம் நான்மட்டும் விதிவிலக்கா? என்று தம்மைப் பெண்டாட்டிற்கு அடங்கியவன் என்று நாணப் படாமல் கூறிக் கொள்கின்றார். குடும்பம் நடத்துவதில் இருவரும் கலந்தால்தான் குடும்பம் பல்வகையில் சிறப்புறும் என்பது நடைமுறை உண்மை. பெரும்பாலும் குடும்பம் நடத்துவதிலும் சரி, பிற விஷயங்களிலும் சரி பெண்கள் கூரிய அறிவுடையவர்கள். தாரையின் அறிவுரையை மதிக்காது போருக்குச் சென்ற வாலியின் நிலையை நாம் அறிவோம். எல்லாக் கடவுளர்களுக்குமே தத்தம் மனைவியரைத் தூக்கி வைத்திருக்கும் நிலைகளைக் காண்கின்றோம். - சிக்கனப் பண்பு என்பது செட்டியார்களிடம் காணும் ஒப்பரிய பண்பாடு. சிக்கனம் வேறு. கஞ்சத்தன்மை வேறு. சிக்கனத்திற்கு எதிரான பண்பு ஊதாரித்தனம். அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். (4:79) என்பது வள்ளுவர் வாக்கு இதுதான் சிக்கனத்தின் அடிப்படை கவிஞர் கூறுவார்.