பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர சிங்கார வடிவேலன் 215 செட்டாக வாழும் சிக்கணமே நம்முதலின் வட்டிக்கு மேலே வளர்ந்த முதலாகும் தனிவாழ்வில் சிக்கனமும் தான தருமத்தில் பனிமலைபோல் உயர்கொடையும் பண்பாட்டின் தனிச்சிறப்பு பெரும்பாலும் எல்லா நகரத்தார்களிடமும் இப்பண்பைக் காணலாம். வள்ளல் அழகப்பர் இதற்கோர் எடுத்துக்காட்டாவார்.தருமம் செய்வதற்கு இவ்வளவு தொகை என்று பிரகடனம் செய்து விட்டுப் பிறகு அத்தொகையைச் சம்பாதித்து வழங்கும் பெருந்தகை அவர். மன்னருக்குப் பின்னே மாதேவன் ஆலயங்கள் கண்ணாகிப் போற்றிக் காப்பவர்கள் நம்மவரே என்ற உண்மையை இன்றையப் பல கோவில்களில் செட்டிமக்கள் செய்த திருப்பணிகளால் உணரலாம். பக்திப் பண்பு மிக்க செட்டிமார்கள் சைவ சமயத்தில் ஈடுபாடு மிக்கவர்கள். அத்தி பூத்த மாதிரி வைணவத்திலும் அவர்கட்கு ஈடுபாடுண்டு. அரியக் குடியில் நிறுவப் பெற்றுள்ளதிருமால் ஆலயமே இதற்கொரு கலங்கரை விளக்கம். சிறப்பாகத் திருமுருகன் ஈடுபாடு மிக்கவர்கள். - தலைக்கென்றே ஒருமொட்டை தவறாமல் திருமுருகன் மலைக்கென்றே வைத்திருக்கும் மரபுடையார் நகரத்தார் செய்யும் தொழில்யாவும் தெய்வத்தின் பேராலே செய்வதனால் தம்மினத்தார் சிறப்பாக வாழுகின்றார் ஆதாய வரவெல்லாம் ஆண்டவனின் பெயராலே மீதேற்ற வைத்ததனால் மேன்மை நிலையடைந்தோம் வேலுக்குப் பூசையென்று வீதியெலாம் கமகமக்க ஆளுக்குச் சோறளிக்கும் அன்னமடம் செட்டிமனை கட்டிலுக்கும் கீழே காத்திருப்பாள் மீனாட்சி தொட்டிலுக்கும் கீழே துணையிருப்பார் சொக்கரெனப் பாலூட்டும் பருவத்தில் பக்தியினைச் சிறுவருக்குத் தாலாட்டுப் பாட்டாய்த் தந்தஇனம் செட்டிஇனம் என்ற கண்ணிகளினால் செட்டி மக்களின் பக்திப் பண்பினைப் பாங்குறக் காட்டுவார் கவிஞர் சிங்கார வடிவேலனார். . விருந்தோம்பல் பண்பு நகரத்தார்களின் நாகரிக உச்சியாகக் காணப்பெறுவது.