பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பு: மு. சாந்தமூர்த்தி 223 7ஆவது கவிதையில் ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூநதம் ஆகியபொன்வகை நான்கும், கிழக்கு மேற்கு,தெற்கு வடக்கு ஆகிய திசைகள் நான்கும் 8ஆவது பாடலில் கல்லாலின் புடையமர்ந்து தென்முகக் கடவுளிடமிருந்து சனகன், சனந்தரன், சனாதனன் சனற்குமாரன் என்ற பிரமபுத்திரர்நால்வரும்,அப்பர். சம்பந்தர், சுந்தரர்,மாணிக்கவாசகர் என்ற சமயக் குரவர் நால்வரும், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற சவமுறை நான்கும் கூறியவர். - நான்கிலே பழமறைகள் காண்ப தாலே நான்குதான் அறிவுக்கு விளக்க மாகும் நான்கினிலே அடியாரைக் காண்ப தாலே நான்குதான் தொண்டிற்கு விளக்க மாகும் நான்கினிலே உலகத்தைக் காண்ப தாலே நான்குதான் வாழ்விற்கும் விளக்க மாகும் நான்கினிலே இறையருளைக் காண்ப தாலே நான்குதான் இறைபயனில் விளக்க மாகும் ! என்ற கவிதையில் நான்கின் சிறப்பையும் பெருமையையும் காட்டுவர். இதில் கவிஞரின் சிந்தனை கொடுமுடியை எட்டி விடுகின்றது. வாசல்:- நான் பேசினால் என்ற பொதுத் தலைப்பில், தெ.பொ.மீ. அவர்கள் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் இத்தலைப்பில் பாடியது. வரலாற்றைப் படைப்பதுதான் கோட்டை வாசல் வளர்மதுரைக் கோர்எல்லை கீழ வாசல் அரசியலில் கட்சிகளே நுழைவு வாயில் ஆடவரும் மயங்குமிடம் விழியின் வாசல் உரங்கொண்ட பேரறிஞர் சமுதாயத்தில் உருவாக்கித் தந்ததுதான் சொர்க்க வாசல் வரவேற்கும் இவ்வாசல் வாழ்க்கை இன்றி வரும்நானோ கல்லூரி வாசல் ஆவேன். இங்கு கவிஞர் காட்டும் பல்வேறு வாசல்களைக் கண்டு மகிழ்கின்றோம். மூன்று மூன்றெழுத்துப் பாடல்களில் ஆசான், கல்வி, வாழ்வு, தேர்வு, கடுமை, தெளிவு. வெற்றி, தோல்வி, அழகு, வீரம், காதல், பாசம், அருள், அன்பு, உறவு தந்தை அன்னை, அண்ணா, தாத்தா, பாட்டி தம்பி, அக்கா, தங்கை, மனைவி, மகன் என்ற சொற்களைப் பொருத்தமாகக்