பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. ஜெய்புன்னிஸ்ா 239 கடமையாகும். சமயம் வாழ்க்கையொடு ஐக்கியப்படும். அப்போதுதான் மனிதன் முழுமை பெறுகிறான். ஓர் இஸ்லாமியன் நாளொன்றுக்கு ஐந்துமுறை தொழுகையை மேற்கொள்ளுகின்றான். தூயதோர் உள்ளமே தரணிவாழ் மாந்தர்தம் தரமெலாம் உயர்த்திடும் சித்து தரமிகு சித்தினில் முளைவிடும் வித்தென வெளிவரும் வலம்புரி முத்து வெளிவரும் முத்தினில் ஒளிவிடும் சுடரென விளங்கிடும் வனமலர்க் கொத்து வனமலர்க் கொத்தினில் வாசனை வீசிடும் வணக்கமே நம்மவர் சொத்து என்ற கவிதை முத்தாய்ப்பாக இதனைச் சுட்டுகின்றது. இறைநகர் மறைமாமணியின் கவிதைகளில் அன்பு தவழ்கின்றது. பெற்றஅன்னை பிள்ளைதன்னைப் பேணும்மாட்சி அன்பினால் பற்றுகொண்ட தந்தை கானும் பாசக்காட்சி அன்பினால் உற்றவர்கள் உறவுகொண்டு ஒழுகும்காட்சி அன்பினால் கற்றவர்கள் மற்றவரைக் காணும்காட்சி அன்பினால் சான்றோர்கள் பற்றிப் பல கவிதைகள் யாத்துள்ளார் நன்னிலம் கண்ட கவிஞர் ஜெய்புன்னிஸ்ா. இவை விசும்பு என்ற சிறு தலைப்பின் கீழ்க் காணப் பெறுகின்றன. 1. தந்தை பெரியார் : தன்மானத் தமிழரினம் தலைநிமிர்ந்து நிற்பதற்குத் தயங்காது உழைத்த தெவர்? சன்மானங் கருதாமல் சகமூடப் பழக்கங்கள் சலியாது எதிர்த்த தெவர்? கண்தானம் செய்தேனும் தன்மானம் பெறும்எண்ணம் கலங்காது கொடுத்த தெவர்? மண்மானம் காத்திடவே மயங்காமல் உழைத்தவொரு மாமேதை பெரியாரவர். 2. அறிஞர் அண்ணா : - உலகோர்க்கு ஒண்தமிழின் ஒழுக்கங் காட்டி உத்தமராய்த் தானியங்கி உயர்ந்தார் அண்ணா நலிவுற்ற ஏழையர்கள் வாழ்வைப் பேண நாள்தோறும் ஆர்வமுடன் உழைத்தார் அண்ணா