பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. ஜெய்புன்னிலா 244 விரிகதிர்ச் செல்வனே உன்னை யல்லால் வியனுலகு வாழ்வதிலை உணரு கின்றோம் எரிதணலை எம்மீது கொட்டி னாற்போல் எல்லையிலா வெப்பமதைக் கூட்டி எம்மைப் பொரிகடலை வறுத்தாற்போல் பொசுக்கி னாலும் பொறுமையொடு நாமதனைப் பொறுத்துக் கொள்வோம் உரிமையொடு உன்னையின்று வேண்டு கின்றோம் உன்தோழன் மழைமேகம் அனுப்பி வைப்பாய் என்றதும் மதியை நோக்கி "கருமுகிலாம் உன்தம்பிஅனுப்பி வைப்பாய்" என விண்ணப்பித்துத் தென்றலை நோக்கி சூல்மேகச் சோதரியை அனுப்பி வைப்பாய்" என்றும் வேண்டுகோள் விடுப்பதானவை படித்தின்புறத்தக்கவையாகும். 'சமதர்மம் என்ற தலைப்பில் பாடும் வரிசையில் இடும்பினை வளைத்தொ டித்து இன்றுயாம் உழைப்ப தெல்லாம் அடுப்பினில் உலையைப் போட்டு அன்னமாய் உண்ப தற்கே படிப்பினில் சிறந்த செல்வர் பசிதனை உணர்ந்த பின்னும் அடித்திடல் வயிற்றில் ஏனோ? அழலவா!துது செல்வாய். என்ற ஒரு கவிதைவெய்யோனிடம் தூது செல்லுமாறு அமைந்து பொதுவுடைமையை நெருடுகிறது. இந்த அவசர யுகத்தில் எல்லோருடைய மனமும் அமைதியை நாடுகின்றது. அதனை அடைய முடியாமல் பரிதவிக்கின்றது. காரணம்? பொருளைக் குவிக்க வேண்டும் என்ற பேராசை, அது வேண்டும், இது வேண்டும் என்று ஆசைப்படும் மனம் அது கிடைக்கப் பெறாமல் ஏமாற்றம், இதனால் நேரிடும் மனமுறிவு போன்றவையே. இதனைக் கவிஞர் இரத்தினச் சுருக்கமாக, - பாசத்தின் பிள்ளையடா நாசம் - பந்த பாசத்தின் பெயரனடா மோசம் என்று கூறுவார். அறிவுக் கூர்மையினால், அறிவியலின் துணையால் எத்தனையோ கண்டு பிடிப்புகள், புதுப்புனைவுகள் வந்துவிட்டன ஆனால் உலகில் அமைதி இல்லைஎன ஏங்குகிறார் பெண்மைக் கவிஞர். புள்ளம் அல்லவா? -