பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 வாழும் கவிஞர்கள் நாமுதல் வந்து புகுந்துநல் இன்கவி துமுதல் பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்னஎன் வாய்முதல் அப்பன். (திருவாய7-9-3) என்ற பாசுரமும் என்நெஞ்சத்து உள்ளிருந் திங்கு இருந்தமிழ்நூல் இவைமொழிந்து திருவாய் 10-6-4) என்ற பாசுரமும் நினைவில் எழுகின்றன. இறைவனே தன்னுள் இருந்து கொண்டு பாசுரங்களைப் பாடுகின்றான் என்பது ஆழ்வார் கருத்து. தேடல் என்ற தலைப்பில் உள்ள, நதிகள் எல்லாம் இணைந்தால் நாட்டில் நெல்மணி வயிறை முட்டாதோ? தலைவர் எல்லாம் இணைந்தால் நாட்டில் தவறுகள் ஒடி ஒளியாதோ? தனியாய் ஒடும் நதிகளைப் போலே தலைவர் எல்லாம் ஒடுகிறார் உண்மைத் தலைவர் எங்கே எங்கே ஒவ்வொரு மனிதனும் தேடுகின்றான் என்ற கவிதைகள் இன்று தடுமாற்றத்துடன் இயங்கும் அரசியலைப் பற்றி ஒவ்வொரு மனிதனும் சிந்திக்கின்றான் என்பதைக் காட்டுகின்றார் கவிஞர். உள்ளம் என்பது கோயில் - அதில் உண்மை என்பது தெய்வம் பள்ளம் மேடு வழியில் - நன்கு பார்த்தால் தானே தெரியும்? கள்ளம் கபடும் நெஞ்சில் - நிலை கொள்ள திருந்தால் தெய்வம் நெஞ்சில் இருப்பது தெரியும் - அது நினைவில் வருவது புரியும் இறைவன் உண்டு என்பதும் - உலகில் இல்லை என்பதும் பழமை இறைவன் பெயரால் இழைக்கும்-தீங்கை எதிர்த்து நிற்பது புதுமை, பழமை மூலம் புதுமை காண்பது பண்டைய உலகின் நிலைமை புதுமை மூலம் பழமை பார்ப்பது இன்றைய உலகின் கொடுமை