பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரா. வைரமுத்து 253 மனம் தத்துவத்தை நோக்கிச் செல்கின்றது. என்பதை அறிய முடிகிறது. வாமனமாக இருந்த அவர் கவிதைப் பாங்கு திரிவிக்கிரமமாக வளரத் தொடங்குவதைக் காண்கிறோம். இவர்தம் மரபுக் கவிதைகள் புதுக் கவிதைகளைப் போல் அதிகம் இல்லை என்றாலும் இருக்கும் வரை பிறருடைய கவிதைகளை விடச் சற்று வேறுபட்ட போக்காக அமைந்துள்ளன என்பதைக் காண்கின்றோம். இவர்தம் கவிதை பற்றிப் பொன்மணி வைரமுத்துவின் வாக்கால் உணரலாம் மதுரைக் கோயில் சுற்றுப் பிராகாரங்களில் காணப் பெறும் விமான வேலைப்பாடுகளைப் போன்றதொரு தெய்வீகச் சிங்காரம் இவருடைய மரபுக் கவிதைகளில் கலைப் பொலிவோடு நின்று கவிதை நெஞ்சங்களை ஆட்கொண்டு விடுகின்றது. பழங்காலத்துச் சிற்பங்களின் திட்பம் இவர்தம் சொற்களுக்குண்டு. படித்தவுடன் வாய்பாடாய் மனத்திற்குள் குடியேறிவிடும் எளிமையும் தேர்ந்தெடுத்த அரிய சொற்களோடு அமைந்தோர்.அருமையும் இவர்தம் கவிதைகளின் உயிர்ப் பண்பு. - காதல் என்பது இறைவனால் ஆண் பெண் இருவருக்கும் வழங்கப் பெற்று ஓர் அற்புதமான தெய்வீகப் பண்பு இது எல்லா உயிர்களிடத்தும் காணப் பெறும் பண்புமாகும். ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியரின் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்துவருஉம் மேவற்றாகும் என்ற நூற்பா இக்கருத்தினையே உணர்த்துவதாகக் கொள்ளுதல் தவறாகாது, குமரப் பருவத்தில் முகிழ்ந்த இக்காதல் உணர்வு கட்டைக்குப் போகும் வரை கட்டவிழ்த்துக் கொண்டு நிற்கிறது. கவியரசு வைரமுத்து துறவி அல்லர், ஆதலால் காதலைப் பற்றிப்பாடுகின்றார். துறவியர் கூடப் பெண்ணை நாக்காலும் உதட்டாலும் உச்சரித்து வெறுப்பதாகத் தோன்றினாலும், அவர்கள் பெண்ணை நினைந்து மனப்பால் குடித்துக் கொண்டுதானே உள்ளனர்? சிலர் உண்மைப்பால் குடிப்பதையும் கேள்வியுறுகின்றோம், தீயிலே கருகிய தேன்மலர், என்ற தலைப்பில் மோகச் சிலையொன்று மூடிய காதலெனும் வேகத்தில் சிக்கி விழியிழந்து - சோகத்தில் வீழ்ந்த துயரத்தால் வெம்பித் துடிக்குமது பாழ்பட்ட நெஞ்சத்தின் பாட்டு. எனக்காதல், வெண்பாவில் வெடிக்கிறது. பின்னர் கலிவெண்பாவில்