பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரா. வைரமுத்து 264 ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அசையாதிருக்கும் மரபு மாளிகையைப் புதுக்கவிதை என்னும் ஐம்பதாண்டு ஆற்றலா அழித்து விட முடியும்? கவியரசும் பிறரும் புதுக்கவிதைக்கு அங்கீகாரம் பெறவே போராட்டம் நடத்தியதாகவும், மரபை மாய்த்து விட அன்று எனவும் தம் நிலையை விளக்குகின்றார். புதுக்கவிதையின் மின்சார அலைகள் மரபுக் கவிதைக்குள் பாய்ச்சப் படவேண்டும், புதுக்கவிதையின் புதுக்குருதி மரபுக் கவிதைக்குள் பீச்சப்பட வேண்டும். மரபுக்காக உயிர் விடுவதாக மார்தட்டும் கவிஞர்களில் பலர் கற்பனையிலும், சிந்தனையிலும் பாலை வனமாகி விட்டனர். இலக்கணத் தெளிவும், கற்பனை வளமும் உள்ள பலர் மரபைக் கைவிட்டு விட்டது மிகவும் பரிதாபம். கோளாறு மரபில் இல்லை. அதனைக் கையாளும் முறையில்தான் அஃது உள்ளது. மரபுத் தந்தியில் புதிய சுரங்கள் புக வேண்டும். தமிழ்க் கவிதை இனி ஒரு புதிய தொனியில் பேசுமாறு அமைக்க வேண்டும். மரபுக்கவிதை ஒரு பூவனமாய்த் திகழ வழிவகுக்க வேண்டும். இளங்கவிஞர்கள் இக்களத்தில் இறங்க வேண்டும். இனிமேல் தளிர்க்க இருக்கும் மரபுக் கவிதைகளை மொழி பெயர்த்தால் சமகால இந்திய மொழிகளின் எந்த கவிதைக்கும் கருத்திலும், கருத்துப் போக்கிலும் தாழாததாய் அமைதல் வேண்டும். 'பத்தாம் பசலியைப் பாடுதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துக் கவிதையின் உள்ளடக்கம் புதியதாய் அமையுமாறு செய்ய வேண்டும். கவிஞர்களும், திறனாய்வாளர்களாக இருந்தால் அவர்தம் படைப்புப் புதிய பதத்தில் அமையும். இவற்றையெலாம் ஒரு மனிதத் தவத்தால் வரம்பெற்றுச் சீர்படுத்த நினைப்பது முயற்கொம்பு ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, இளங்கவிஞர்கள் ஒன்று திரண்டு தேர் இழுத்தால் நிலையான முடிவைப் பெறலாம், மரபுக் கவிதை இனிச் சூடாய்ச் சூல் கொள்ளும் என்பதை எதிர் பார்ப்போம். மரபும் புதுமையும் மாலை மாற்றிக் கொள்ளட்டும்இவை வைரமுத்துவின் அதிவேத் தூண்டல். இந்த அளவில் வைரமுத்துவின் கவிதை பற்றிய சிறப்பை நிறைவு செய்கிறேன்.