பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் முடியரசன் 33 அற்புதம் படை பலம்-தொடை நலம் என்ற தொடர்களின் நயம் எண்ணி மகிழத் தக்கது. எனக்கும் ஒர் அதியன் என்ற தலைப்பில் பாடிய கவிதைகள் முடியரசனாரின் செய்ந்நன்றியறிதல் பண்பை உயர்த்திக் : י 莎 ငွါ &ট

காட்டுகின்றன. குருதியுமிழ் கொடுநோய்க்கு ஆளான போது, புதுக்கோட்டை அண்ணல் புஅ.சுப்பிரமணியனார் முன்வந்து சிகிச்சை பெறச் செய்து உயிர்காத்த உத்தமனாகின்றார். இராம காதையில் தமயனுக்காக உயிர் கொடுத்துச் செய்ந்நன்றியறிதல் உணர்வைக் காட்டினான் கும்பகருணன், இங்கு உயிரைக் காவாது மறுபிறப்பு எய்தச் செய்த கப்பிரமணியனாருக்குக் காட்டும் செய்ந்நன்றி உணர்வைக்

  • A. ; - * ~.

காட்டும் பாடல்கள் அற்புதமானவை. குருதியுமிழ் கொடுநோய்க்கே ஆளாய் நின்றேன் குறுநகையும் பெருநகையும் இழந்து நின்றேன் செறுபகையும் எனைக்காணின் இரங்கி நிற்கும் செயல்ற்றேன் நடைதளர்ந்தேன் உடல்மெ லிந்தேன் மறுபடியும் உயிர்வாழ்வேன் என்ற எண்ணம் மாய்ந்துவிட மாயாத கவலை கொண்டேன் உறுதிஉனைக் காக்கின்றேன்' என்று வந்தென் உயிர் காத்தாய் உன்னருளால் வாழ்கின் றேன்தான். உயிர்காத்த உத்தமனே என்பாற் கண்ட உயர்வென்ன தமிழன்றி வேறொன் றில்லை செயிரில்லாச் செந்தமிழைப் பாடும் வாயில் செங்குருதி சித்துவதா எனநி னைத்தோ உயிர்பிழைத்தால் இன்னும்போய்த் தமிழைக் காப்பான் உயர்களிதை பலதருவான் எனுங்க குத்தோ அயர்வின்றி அருகிருந்து காத்த தாயே ஆலயமாய் என்னுளத்தில் அமருந் தேவே. தாய்தந்தை நல்லன்பைக் கண்டேன் அல்லேன் தகுபொழுதில் உதவுவதற் குறவு மில்லேன் நோய்வந்து மனத்துயரால் மாழ்கும் காலை நுவலரிய தனித்துணையாய் இராமச் சந்திரச் சேய்கொண்டு மனநோயைத் தீர்த்து வைத்துச் சிறியேனை நின்குடும்பத் தொருவ னாக்கிச்