பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ் கே இராமராசன் 37 தண்டபாணி சுவாமிகள். திருவரங்கப் பெருமான் மீது ثنتييه" திரவரங்கத் திருவாயிரம் இயற்றியுள்ளார். அதுபோல் திருவேங்கடமுடையான் மீது ஒரு பக்திப் பனுவல் இயற்றவேண்டும் என்ற ஆர்வத்தால் துண்டப் பெற்று, திருவேங்கடமுடையான் திருவாயிரம் என்ற நூல் உருவாயிற்று. இதில் அடங்கிய சிற்றிலக்கியங்கள் திருப்பல்லாண்டு 2 திருப்பள்ளி எழுச்சி ே திருப்பாவை 4 கலி வெண்பா 5 பிள்ளைத் தமிழ் 6 கலம்பகம் .ே அலங்காரம் 8 பதிகங்கள் 19 ஒருபா ஒருபஃது 0ே இரட்டைமணிமாலை 好“変愛 محتي 11 மும்மணிக் கோவை 12 நான்மணிமாலை அனைத்திற்கும் பாடல் நாயகன் திருவேங்கடமுடையானே. இவை வெளிவந்தால் குமரகுருபர அடிகள், சிவப் பிரகாச அடிகள்போல் இராமராசன் திகழ்வார் என்பதற்கு ஐயமில்லை. திருவேங்கடமுடையான் மீது எழுதிய பாடல்களில் முதலில் திருப்பல்லாண்டில் இரண்டு பாடல்களைப் பார்ப்போம் பல்லாண்டு பல்லாண்டு வேங்கடக் குன்றின் பயின்றோர்க்கு நீல முகிலே பல்லாண்டு பல்லாண்டு நின்கொற்ற மார்பிற் படிந்தோங்கு கருணை வடிவே. இதில் வேங்கடவனுக்கும் அவன் திருமார்பில் 'அகலகில்லேன் இறையும்' என்று அகலாதிருக்கும் அலர்மேல் மங்கைக்கும் பால்லாண்டு பாடுகிறார் ஆசிரியர். அடுத்த பாடலிலும் ஏழுமலையான் திருமார்பில் இருக்கும் பெரிய பிராட்டியாருக்கும் பல்லாண்டு பாடுவதைக்காண்கின்றோம். சீலம் இன்றி நோன்பின்றிச் செறிவும் இன்றி உயிர்க்கூட்டம் ஞாலம் வருந்தப் புரிகின்ற கலியை நினைந்து நின்னுள்ளத்துச் சால முளைக்கும் சீற்றமெனும் தழலை யவிக்க நின்மார்பில் கோலம் பொலிய வீற்றிருப்பாள் கொற்றம் வளர்க்கபல்லாண்டு இதில் எம்பிராட்டியின் புருஷகாரம் தகவுரை குறிப்பிடப் பெற்றிருத்தலைக் காணலாம். "நீரிலே நெருப்புக் கிளருமாப் போலே.