பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蟹。 VH திருவருள் திரு திருவண்ணாமலை ஆதீனம் தெய்வசிகாமணி பொன்னம்பல குன்றக்குடி - 630 206 தேசிக பரமாசாரிய சுவாமிகள் சிவகங்கை மாவட்டம் (ஆதீனகர்த்தர் தமிழ்நாடு ༼གླུ། ་་ குன்றக்குடி - 4ே577 - 54287 காரைக்குடி - 04565 - 2325 நாள் 22-11-98 அணிந்துரை செட்டி நாட்டில் சைவமும் தமிழும் சேர்ந்தே வளர்ந்தது. வாழும் கலையும் பிறரை வாழ வைக்கும் கலையும் நன்கறிந்த நகரத்தார் மரபில் தமிழ்ச் செம்மல் ரெ. முத்துக்கனேசனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு அமைத்து, அயராது தமிழ் வளர்க்கின்றார். அந்த அறக்கட்டளைச் சொற்பொழிவாக, நமது ஆதீனத்தின் அருங்கலைக்கோ பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார் "வாழும் கவிஞர்" பதினாறு பேரின் கவிதைகளைச் சிறப்பாக ஆய்வு செய்துள்ளார். தமிழ், என்றும் பதினாறாய், இளமையாய் இருக்கின்ற காரணத்தால் பதினாறு கவிஞர்கள் நூலாசிரியர் தேர்வு செய்துள்ளார் போலும். ந. சுப்புரெட்டியார் சுந்தரத் தமிழுக்குச் சொந்தக்காரர்; இன்று வாழும் தமிழறிஞர்களில் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பெட்டகம். தமிழைக் கற்பவர் சிலர் ; கற்றவழி நிற்பவர் சிலரில் சிலர்! கற்றவழி நின்றதோடு, நானிலத்தை நல்வழிப்படுத்த சமூகம் மேம்பாடடைய வழிகாட்டுவோர் வெகுசிலர்! தமிழால் தரணியில் உயர்பீடத்தில் நிற்பவர் பலர் தமக்காய் தமிழை விற்பவர் பலர் ! தமக்கெனத் தமிழைப் பயன்படுத்தி, மலரின் மகரந்தத்தில் தேனை நுகர்ந்து, மரப்பொதியில் மனித சமுகத்திற்குச் சேர்த்து வைக்கின்ற