பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளந்தரா கைலாசம் 77 நானிலம் கண்டு கொண்ட நல்லதோர் விளக்கம் ஆவார். என்பது வங்க நாடு ஈந்த இராமகிருஷ்ணரைப் பற்றிய ஆறு பாடல்களில் ஒன்று. மோகத்தை அகற்றி இன்ப முகத்தினைக் கண்டே, அந்த ஏகத்தை இணையில் லாத எழிலினை எண்ணி எண்ணிச் சோகத்தை மாற்றும், நெஞ்சுள் சுகத்தினைக் காண்னன் றார்த்த வேகத்தை விவேகா னந்த வெள்ளத்தை வியவார் யாரே? என்பது வங்க நாடு தந்த நரேந்திரர் என்னும் விவேகானந்தரைப் பற்றிய ஐந்து பாடல்களில் ஒன்று. இலக்கியமும் சரித்திரமும் காட்டு கின்ற இணையற்ற பெண்களுக்கும் உள்ளம் தன்னைக் கலக்குகின்ற வேதனைகள் வந்த துண்டு. காலத்தின் கைப்பிடியுள் நொந்த துண்டு, துலக்கமுறு நமதன்னை சார தைக்கோ தொடர்ந்திருந்த செளபாக்கியம் அதனால் எந்த நலக்குறைவும் வந்ததிலை வாழ்க்கை முற்றும் நன்மைகளே பெருகிவரக் கண்டி ருந்தோம் என்பது அன்னை சாரதா தேவியைப் பற்றிய பாடல்களில் ஒன்று. கணிவினைப் பார்வை யாக்கும் கலையினில் வல்ல உன்றன் நினைவினில் ஞானம் தந்த நிழலினில் ஒதுங்கி நிற்கும் எணைஇடர்ப் படுத்த வந்தால் எவ்வகைத் துன்ப வாளும் முனையது மழுங்கும், தோற்று மூலையில் ஒடுங்கும் தானே. என்பது காஞ்சிப் பெரியவரைப் பற்றிய ஒன்பது பாடல்களில் ஒன்று.