பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8to வாழும் கவிஞர்கள் எற்றுவாய் மேல்ந ! டப்பாய் ஏழையர் நலம்பெருக்கச் சுற்றுவாய்: உனது சொந்தச் சுகமெதும் கருதாய் நெஞ்சில் தொற்றுவாய் என்றும் மக்கள் தொழுதிடு மாறு நீயே..! இந்திரா காந்தி மீது பாடிய ஐந்து பாடல்களில் இஃதொன்று. வெளிநாட்டில் பிறந்தாலும் தமிழின் மேன்மை மிகவுயர்ந்து வாழ்க்கையிலே பார்க்கும் நல்ல ஒளிகாட்டும் இலக்கியங்கள் சமைத்துத் தந்தார் உயர்தமிழ்க்கே அகராதி தொகுத்துத் தந்தார் தெளிவான இலக்கியங்கள் எழுத்து மாற்றம் செய்துவைத்துத் தமிழ்நெஞ்சில் நிலைத்து விட்டார் ஒளிமறைவு இல்லாமல் கேட்கின் றேன்நான் ஒருதமிழர் இவர்போலச் செய்த துண்டோ? பெண்ணுக்குக் கற்பென்னும் அணியே போலப் பிள்ளைக்கு மழலையெனும் கனியே போலக் கண்ணுக்குப் பார்வையெனும் பயனே போலக் கவிதைக்குச் சொல்லென்ற கவினே போல மண்ணுக்குப் பயிர்கள்தரும் வினையே போல மனதுக்குக் கருணையெனும் அமுதே போல ஒண்ணுக்குள் ஒண்ணாகித் தமிழர் வாழ்க்கை உடன்கலந்த மாமுனியை உளத்தில் கொள்வோம். பெஸ்கி பாதிரியார் என்ற தம்பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டு தமிழர் போல வாழ்ந்து தமிழருக்கு அரும்பெருந் தொண்டாற்றிய மேதையைப் பற்றிய ஒன்பது பாடல்களில் இவை இரண்டு. இன்னும் தந்தை பெரியார்.ஆறுமுக நாவலர், கம்பர் வள்ளுவர், சங்கர்தாஸ் சுவாமிகள், பாரதி, பாரதிதாசன், மறைமலையடிகள், ரசிகமணி, டி.கே.சி.செட்டிநாட்டரசர் அண்ணாமலைச்செட்டியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க.வள்ளல் அழகப்பர். தமிழ்நாடகத் தந்தை சம்பந்த முதலியார், சொல்லின் செல்வர் சேதுப் பிள்ளை, நாமக்கல் கவிஞர், டாக்டர் மு.வ, தமிழ்க் கடல் இராய.சொ. கவியரசு கண்ணதாசன் முதலியோர்கள் பற்றி