பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வாழும் கவிஞர்கள் பெய்மலராம் தனிப்பாக்கள் உதிர ஆடும் பேசுமொழித் தமிழ்த்தாயே ஆடீர் ஊஞ்சல் இஃது ஊசல் என்ற இலக்கிய வகையைச் சேர்ந்தது. ஊசலாவது ஆசிரிய விருத்தம் அல்லது கலித்தாழிசையில் ஆகி, ஆடீர் ஊஞ்ச ஆடாமோ ஊசல், ஆடுக ஊசல் என ஒன்றால் முடிவு பெறுமாறு அமைப்பது. திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின், சீரங்க நாயகர் ஊசல் மிகு புகழ் வாய்ந்தது. இது கலம்பகம் என்ற நூலில் ஓர் உறுப்பாகவும் வருவதுண்டு. இவ்வகை இலக்கியம் தொண்ணுற்றாறு பிரபந்த வகைகளுள் ஒன்று கவிஞர் முத்துக் கணேசனார் தமிழைத் தமிழ்த் தாயாக உருவகித்து ஊசலில் ஆட விடுகின்றார். தமிழ் அம்மானை' என்ற தலைப்பில் பதினைந்து பாடல்கள் உள்ளன. 'அம்மானை' என்பது பிரபந்த வகைகளுள் ஒன்று. மூன்று மகளிர் ஒருங்கு இருந்து அம்மானை ஆடுங் காலத்துப் பாட்டுடைத் தலைவன் புகழை ஒருத்தி வினாவாகப் பாட ஒருத்தி விடையளிக்கும் முறையில் பாட மற்றொருத்தி அதற்கான காரணங்கள் கூறும் முறையில் பாடுவதாக அமைந்திருக்கும். இருபது பாடல்களில் அமைந்த மணிவாசகப் பெருமானின் திருவம்மானை மிகுபுகழ் வாய்ந்த இலக்கியம்.இது ஒருத்திபாடுவதாக அமைந்திருப்பது கவிஞர் முத்துக் கணேசனார் மூவர் பாடுவதாக அமைந்துள்ளார். பதினைந்து பாடல்களில் தமிழை ஒருவகையாக உருவகித்துப் பாடும் கவிஞர், தமிழ்த்தாய் குறள்,சிந்தாமணி,இராமகாதை, சிலம்பு போன்ற நூல்களாக ஆயினளோ என்று வினா விடுத்து, அங்ங்னமே ஆயினாள் என்று விடையிறுத்து முடிக்கின்றார். நாவாரப் போற்று திருநல்ல மலர்தொடுத்துப் பூவாரம் பூணாத பொற்றமிழாள் அம்மானை பூவாரம் பூணாத பொற்றமிழாள் ஆமாயின் தேவாரம் பூண்ட செயலென்ன அம்மானை தேவாரம் பூண்ட தெய்வமகள் அம்மானை இந்த இலக்கியத்தின் இறுதிப் பாடலில், கவிஞர் தம்முடைய நல்லுரை வெண்பா என்ற நூலுக்கும் இடந்தந்து விடுகின்றார். முத்துப் பல்வரிசை முகங்காட்டும் இச்செல்வி தத்தி மொழிபேசும் தமிழ்மாதோ அம்மானை