பக்கம்:வாழும் தமிழ்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 "மயங்காதே'

"பந்தாடி அங்கம் நொந்தார் பரிந்து' என்று ஒருவர் பாடிக்கொண் டிருந்தார். அதைக் கேட்ட மாளுக்கர் ஒருவர், ஒகோ, அந்தக் காலத்திலேயே பங்தை எங்களைப் போன்ற மானுக்கர்கள் ஆடி வங்தார்கள் என்று தெரிகிறதே!’ என்று ஆராய்ச்சி இல்லாமலே ஒரு முடிவு கட்டினர்.

ஆனல் அருகே இருந்த புலவர் ஒருவர் அந்த மானுக்கருடைய மகிழ்ச்சியைக் கெடுத்துவிட்டார். "அப்படிப் பங்து ஆடினவர்கள் டெண்கள்’ என்று கனைத்துக்கொண்டே அவர் சொன்னர்,

'பெண்களா? சுத்தத் தப்பு: பெண்களும் இருக்க லாம். ஆனல் ஆண்கள் அல்ல என்று சொல்ல என்ன சாட்சி அதில் இருக்கிறது?’ என்று ஆத்திரத்தோடு கேட்டார் இளைஞர். -

அவர் கேட்ட கேள்வி என்னவோ நியாயமாகத் தான் படுகிறது. "பங்து ஆடி அங்கம் கொங்தார் பரிந்து’ என்ற வாக்கியத்தில் பெண்கள் என்று குறிப்பிடுவதற்கோ, ஆண்கள் அல்ல என்று விலக்கு வதற்கோ வேண்டிய வார்த்தை ஒன்றும் இல்லை. ஆடுதல், அங்கம் கோதல் ஆகிய இரண்டு காரியங்களும் ஆண்களிடத்திலும் இருக்கலாம். ,

மாளுக்கர் இந்த யோசனைகளின் மேல்தான் தம் முடைய வி ைஅம்பை எடுத்துவிட்டார். புலவருக்கோ பழைய நூல்களாகிய கவசம் கையில் இருந்தது. ஆகவே, அவர் அங்தக் கவசத்தை எடுத்து முன்னே நீட்டலானர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/104&oldid=646143" இலிருந்து மீள்விக்கப்பட்டது