பக்கம்:வாழும் தமிழ்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயங்காதே! 97

தனியே பிரித்துச் சொல்லும்போது முதலில் சொன்னது பெண்களே என்று தெரிந்துகொள்ள வேண்டும் அந்தக் காலத்தில் பெண்களே பங்தாடுவது வழக்கம். பக்தார் விரலி, பக்தனே விரலாள், பங்தாடழகி என்று பெண்களே வருணிப்பார்கள். பல சிவஸ்தலங்களில் அ ம் பி ைக க் கு அத்தகைய திருநாமங்கள் அமைந்திருக்கின்றன என்று புலவர் ஒரு சிறிய சொற்பொழிவே செய்துவிட்டார்.

இந்தச் சங்கடம் வந்ததற்குக் காரணம் இரண்டு. பங்தாடி அங்கம் நொந்தார் பெண்கள் என்பதற்கு அந்த வாக்கியத்தில் சிறப்பான அடையாளம் இல்லை. இது முதல் காரணம். இரண்டாவது காரணம் பழங்காலத்தில் மகளிரே பக்தாடினர்கள் என்ற செய்தியை மாணுக்கர் அறியாதது. பெண்கள் பந்தாடினர் என்று சொல்லாதது குற்றம் அல்ல; அந்தக் காலத்து வழக்கத்தைத் தெரிங்துகொள்ளாமல் அர்த்தம் பண்ணப் புகுந்ததுதான் தவறு.

“சொல்கிற வாக்கியத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டாமோ? மயக்கம் உண்டாகும்படி சொல்வது குற்றம் ಅಖ೩. இலக்கணம் தெளிவைத்தானே வற்புறுத்துகிறது?’ என்ற கேள்விகளே யாராவது கேட்கலாம். - -

உண்மை தெளிவுதான் மொழியின் சிறப்பை உயர்த்தும். எது தெளிவானது? எது தெளிவற்றது? என்ற விஷயம் காலத்தாலும் இடத்தாலும் நிர்ணயம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. சில நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து பாடிய தமிழ்க் கவிஞர், இருபதாவது நூற்ருண்டில் வாழப்போகும் வாழ்க் கையைக் கவனித்து அதற்கு ஏற்றபடி பாடுவ தென்பது சாத்தியம் அன்று. இருபதாவது நூற்ருண்டில் வாழும் காமே அந்தக் காலத்து

வா. த.-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/106&oldid=646147" இலிருந்து மீள்விக்கப்பட்டது