பக்கம்:வாழும் தமிழ்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வாழும் தமிழ்

முதலைக் குறிக்கும் சொல்லே எழுவாய் என்பது வழக்கம்.

வினையென்பது செயல்; அதனைச் செய்பவன் வினே முதல், மரம் என்பது செயப்படு பொருள். வெட்டுதல் என்னும் செய்கைக்கு உள்ளாகும் பொருள் அது.

மரத்தை முருகன் வெட்டுவதற்கு ஆயுதம் வேண்டுமல்லவா? வாளால் வெட்டுகிருன் என்று வைத்துக்கொள்வோம். முருகன் அளவிலே கின்ற நம் கவனம் அவன் செய்யும் காரியத்திலும் பிறகு அங்கக் காரியத்தால் பாதிக்கப்படும் பொருளிலும் சென்றது. இப்போது அங்தச் செயலைச் செய்யும் மனிதனுக்குக் கருவி ஒன்று உண்டு என்ற நினைவு வருகிறது. முருகன் வாளால் மரத்தை வெட்டினன் என்ருல், வாள் அங்கே கருவியாக நிற்கிறது.

முருகன் எதற்கு மரத்தை வெட்டுகிருன்? விறகுக் காகத்தான். இது அடுத்த விஷயம். விறகு என்ற பயன் இப்போது வருகிறது. முருகன், அவன் செய்யும் காரியம், மரம், வாள், விறகு என்று இத்தனை செய்திகளோடு ஒரு செயல் தொடர்புடையதாகி விரிந்துவிட்டது.

அதோ அங்கே வேருெருவன் மரத்தை வெட்டிக் கொண்டிருக்கிருன். அவன் வெட்டுவதையும் முருகன் வெட்டுவதையும் ஒப்பு நோக்குகிருேம். அவன் பெயர் வேலன். முருகன் வேலனேக் காட்டிலும் வேகமாக வெட்டுகிருன். இந்த ஒப்புமையைப்பற்றிய பேச்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/125&oldid=646191" இலிருந்து மீள்விக்கப்பட்டது