பக்கம்:வாழும் தமிழ்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 வாழும் தமிழ்

சேய்ஒக்கும் முன்னின்ருெரு

செல்கதி உய்க்கும் நீரால் நோய்ஒக்கும் என்னில்

மருந்தொக்கும், நுணங்கு கேள்வி ஆயப் புகுங்கால் அறிவொக்கும் என்று வருகிறது இராமாயணப் பாட்டு.

காப்புத் தொழிலைப் புரியும் அரசன் தன் இயல் பில்ை பல பொருளே ஒப்புக் கூறும்படி விளங்கு கின்ருன். அந்த ஒத்தல் கொழிலேக் காப்புக்கு அடுத்தபடி தொல்காப்பியர் சொல்கிருர், அரசன் தேரூர்ந்து செல்கிருன். மதில் முதலியவற்றை இழைக்கிருன். பகைவரை ஒட்டுகிருன். நல்லது செய்தால் மக்கள் அவனேப் புகழ்கிரு.ர்கள். சிறந்த முறையில் அரசியலே நடத்தினல் பல பொருளே அவன் பெதுகிருன்: இல்லாவிட்டால் இழக்கிருன் நல்லவர் களைக் காதலிக்கிருன். அதனால் அவர்களே உவக் கிருன். தியவர்களை வெகுள் கிருன். அ த ைல் அவர்களேச் செறுகிருன். பல திே முறைகளைக் கற்கிருன்.

இங்தத் தொழில்களெல்லாம் தொல்காப்பி யருக்கு நினைவுக்கு வருகின்றன. இவை அனைத்தும் அரசன் மாத்திரம் செய்யும் தொழில்கள் அல்ல. பிறரும் செய்கிருர்கள். குடும்பத்தைக் காக்கும் தொழிலே விட்டுத் தலைவன் செய்கிருன். அவன் காளேமாட்டைப்போல உழைக்கிருன். வீட்டை இழைக்கிருன். மகளிர் கிளியை ஒப்புகிருர்கள்.

இவ்வாறு தொல்காப்பியர் சொல்லும் தொழில் வரிசையில் சில இரட்டைகள் உள்ளன. நேர் எதிராக உள்ளவை சில. புகழ்தல் பழித்தல் என்ற இரண்டை யும் அடுத்தடுத்துச் சொல்கிருர். அவை ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை. பெறுதல்-இழத்தல், காதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/135&oldid=646212" இலிருந்து மீள்விக்கப்பட்டது