பக்கம்:வாழும் தமிழ்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 பார்க்காத பார்வை

'கண்ணிற் சிறந்த உறுப்பில்லே' என்று பழம் புலவர் ஒருவர் சொன்னதற்கு வியாக்கியானமே வேண்டியதில்லே. உலகம் முழுவதும் கண் உடையவர் களாலே பெருவளம் பெறுகிறது. நமக்கு அருமை யான மனிதர்களைக் கண் என்றும், கண்மணி என்றும் பாராட்டிப் பேசுகிருேம். உயிர் மிகவும் அருமை யானது; அதற்கு அடுத்த படியாக அரிய பொருளாக நிற்பது கண். -

அவ்வளவு உயர்வாகக் கருதுவதற்குரிய கண்ணேக் கூட மட்டமாக்கிவிடும் ஒன்று மனிதனிடம் இருக் கிறது. இந்தக் கண்ணே அகக்கண் என்று கூறுவது வழக்கம். புறக்கண்ணுலே மாத்திரம் பார்க்கும் பார்வை விலங்குகளுக்கும் இருக்கிறது. மனிதன் உயர் திணை ஆயிற்றே: அவன் அகக்கண்ணேக்கொண்டு. பார்க்கத் தெரிந்தவதைலால் அவனுக்கு அந்தப் பெருமை வந்தது. முகத்திலே உள்ள கண்கள் உருவம் உள்ள பொருளேத்தான் பார்க்கும். நிறமும் வடிவும் எப்படி உள்ளன என்று தெரிந்துகொள்ளும். அதற்கு மேலே பார்வை செல்லாது புறவாயிலிலே கின்றுவிடும் பார்வை முகக்கண்ணுல் பார்க்கும் பார்வை. புறத்தைக் கடந்து அகத்துள்ளே சென்று பார்க்கும் பார்வை ஒன்று உண்டு; அதையே. அகக்கண் என்றும் அறிவு என்றும் சொல்வார்கள். எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. - எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/139&oldid=646221" இலிருந்து மீள்விக்கப்பட்டது