பக்கம்:வாழும் தமிழ்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 அழைப்பின் சரித்திரம்

ஒரு செட்டியார் இரவில் படுத்துத் தூங்கிக் கொண் டிருந்தார். ஏதோ சத்தம் கேட்டு விழித்துக் கொண்டார். படுத்தபடியே கவனித்தபோது தம் வீட்டில் தி ரு ட ன் வந்திருப்பது குறிப்பாகத் தெரிந்தது. உடனே எழுந்திருந்து ஏதாவது செய்தால் திருடன் தம்மை எதிர்த்து அடித்துவிட்டால் என்ன செய்வது என்று பயங்தார். மெல்ல அருகில் இருந்த தம் மனைவியைச் சத்தம் போடாமல் நிமிண்டி எழுப்பிப் பேச ஆரம்பித்தார்.

"ஆண்டவன் அருளால் நமக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறது. அதற்கு என்ன பெயர் வைப்பது?’ என்று செட்டியார் கேட்டார்.

"எங்கள் தகப்பனர் பெயரை வைக்கலாம்’ என்ருள் அவள்.

'அதெல்லாம் கூடாது. நான் ராமன் என்ற பெயரைத்தான் வைக்கப்போகிறேன். பல நாளாக அப்படித்தான் மனசில் கினைத்துக்கொண் டிருக் கிறேன். நீயும் நல்லபடியாகப் பிள்ளே பெற்றுக் குழந்தை கடவுள் அருளால் நன்முக இருந்தால் அவனே அலங்காரஞ் செய்து கொஞ்சுவேன். ராமா ராமா என்று வாயார அழைப்பேன்’ என்ருர்,

'நான் வேறு பெயர்தான் வைப்பேன்’ என்ருள் அவர் மனைவி.

'முடியவே முடியாது, நான் ராமன் என்றுதான் பெயர் வைப்பேன். ராமா, ராமா என் றுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/151&oldid=646247" இலிருந்து மீள்விக்கப்பட்டது