பக்கம்:வாழும் தமிழ்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழைப்பின் சரித்திரம் . 143

கூப்பிடுவேன். நீ என்ன எனக்குச் சொல்வது?” என்று பேசிக்கொண்டே ; 'ராமா.அ.அ. ராமா அஅ!” என்று பலமாக அழைத்துக் கூவத் தொடங்கி விட்டார்.

பக்கத்து வீட்டு ராமன் செட்டியார் இந்தக் குரலேக் கேட்டுத் தம்மைச் செட்டியார் அழைக் கிருரென்று எண்ணி, ஏதோ அபாயம் போலும்!” என்ற நினைவில்ை அவசரமாக எழுந்து வந்து கதவைத். தட்டினர், இந்தச் செட்டியார் எழுந்துபோய்க் கதவை திறந்து அவரை அழைத்து வந்தார்.

"என்னை ஏன் அழைத்தீர்கள்?’ என்று வந்தவர் கேட்டார். •

"பாதி ராத்திரியில் உங்களே கான் எதற்காக அழைக்கிறேன்? எனக்குப் பிள்ளை பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்பதுபற்றி எனக்கும் இவளுக்கும் விவாதம் ஏற்பட்டது. கான் ராமன் என்று தான் பெயர் வைத்து அழைப்பேன் என்றேன். இவள் வேறு பெயர்தான் வைக்கவேண்டும் என்ருள். கான் ஒரே பிடிவாதமாக ராமா என்றுதான் கூப்பிடுவேன் என்று இவளுக்குக் கூப்பிட்டுக் காட்டினேன். நான் சொல்வதில் கம்பிக்கை இல்லாவிட்டால் அதோ இருக் கிருரே, அவரைக் கேட்டுப் பாருங்கள்” என்று சொல்லி மேல்பரணைக் காட்டினர்.

செட்டியார் விழித்துக்கொண்டது முதல் ஒன்றும் செய்யத் தோன்ருமல் திருடன் அங்கே ஒளிந்துகொண் டிருந்தான். செட்டியார் சுட்டிக் காட்டிய பிறகு, தான் ராமன் செட்டியாருக்கு கண்பருடைய தந்திரம் தெரிந்தது. திருடனே இரண்டு பேரும் சேர்ந்து பிடித்துச் செய்யவேண்டியதைச் செய்தார்களாம்.

இப்படி ஒரு கதை வெகு காலமாகத் தமிழ் காட்டில் வழங்குகிறது. செட்டியார் குழந்தையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/152&oldid=646250" இலிருந்து மீள்விக்கப்பட்டது