பக்கம்:வாழும் தமிழ்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 சமுதாயப் பிரிவுகள்

மனித சமுதாயம் அனேத்தும் ஒன்று என்பது அடிப்பட்ட உண்மை. பல திறங்களில் மனித இனம் ஒரே மாதிரி உணர்ந்து பேசி கடந்து வருகிறது. ஆலுைம் பல வேறு காரணங்களால் அந்த இனத்திலே வெவ்வேறு வகையான பிரிவுகள் தாமே அமை கின்றன. அத்தகைய பிரிவுகள் தொழில், உணர்ச்சி, இடம் முதலிய தொடர்புபற்றி ஏற்படுகின்றன. இயற்கையிலே மனித சாதியில் ஆண் என்றும், பெண் என்றும் ஒரு வகையான பிரிவு அமைந்திருக்கிறது. அந்தப் பிரிவு காரணமாக வேற்றுமை வளரவில்லை. இயற்கையின் விசித்திர அமைப்பினால் அவ்விரு பிரிவினரும் தங்களுள் ஒன்றி வாழும்படியாக இருக் கிருர்கள். -

செயற்கைப் பிரிவும் இப்படித்தான் அமைய வேண்டும். ஒரு சாரார் குறையை அல்லது தேவையை மற்றெரு சாரார் நிரப்பவேண்டும். அப்போதுதான் வேற்றுமையினிடையே ஒற்றுமை நிலவும், ஒரு பெரிய இசைக் கச்சேரியில் பாடும் புலவனும் இயங்களே எழுப் பு ம் புலவர்களும் வெவ்வேறு வகையில் தொழில் புரிகிருர்கள். மிருதங்கக்காரன் கைகளால் வாத்தியத்தைக் கொட்டி வாசிக்கிருன். வீணே வித்துவான் விரல்களால் நரம்புகளைத் தெறித்து வாசிக்கிருன். இப்படி வேறுபாடுகள் பல அமைக் தாலும் அவற்றினூடே ஒர் இசைவு இருக்கிறது; அதல்ைதான் சங்கீதம் சிறப்பாக அமைகிறது.

தமிழர் வாழ்க்கையில் இந்த ஒற்றுமை இருந்தது. வேறுபட்ட பிரிவுகள் இருந்தாலும், அவை ஒன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/163&oldid=646273" இலிருந்து மீள்விக்கப்பட்டது