பக்கம்:வாழும் தமிழ்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயப் பிரிவுகள் 155

ைேடு ஒன்று ஒட்டி வாழும் பண்பில் சிறந்து கின்றன. அந்தப் பிரிவுகளுக்குக் காரணமாக இருந்த தகுதிகள் இப்போதும் இருக்கின்றன.

மக்களுக்குள் அமைந்த பிரிவுகளே அவர்களுடைய பெயர்களே விளக்குகின்றன. தொழில் முதலிய வற்ருல் வேறுபட்டவர்கள் என்பதை அப்பெயர் களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். பெயர்களின் இலக்கணத்தைச் சொல்ல வங்த தொல்காப்பியர் உயர் திணையாகிய மக்களுக்கு அமையும் பெயர்களைப் பற்றியும் சொல்கிருர். அங்கே உள்ள செய்திகளேக் கொண்டு தமிழருடைய பண்டை வாழ்க்கை நிலையில் அமைந்த சில பகுப்புக்களே உணரலாம்.

தேர்தல் காலங்களிலும், உத்தியோகம் வழங்கும் சமயங்களிலும் இப்போது வகுப்புக்களாக மக்கள் தொகுதியை வகுக்கிருர்கள். இந்த வகுப்புப் பிரிவினை நன்மையையும் செய்கிறது; தீமையையும் செய்கிறது. ஒரு வகுப்பார் பிறர் நலத்தையும் கருத்திலே கொண்டு காரியங்களேச் செய்தால் மனித சமுதாயத்தில் நன்மை விளேகிறது. தம் கலத்தையே எண்ணி மற்றவ ருடைய நலன்களே கினையாமல் செயலாற்றினல் தீமை உண்டாகிறது.

தொல்காப்பியர் எந்த எந்த வகுப்பைச் சொல் கிருர்? மரபியல் என்ற பகுதியிலும் வேறு சில இடங் களிலும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பிரிவைச் சொல்கிருர், அவை குடிப்பெயர்கள். பெயரின் இலக்கணத்தைப்பற்றிச் சொல்லும் பகுதியில் முதலில் பிறந்த நிலத்தைக் குறிக்கும் பெயரைத்தான் வைக்கிருர். இன்ன நாட்டினர் என்று வகுத்துக் கூறுவதுதான் தலைமை பெறுகிறது. சோழ நாட்டார், அருவாளர், கொங்கர் என்று கூறும் பெயர்களை நிலப் பெயர் என்று கூறுவர். மனிதனுக்கு அபிமானம் எங்த முறையில் கிற்கும் என்பதைத் தொல்காப்பியர் கூறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/164&oldid=646274" இலிருந்து மீள்விக்கப்பட்டது