பக்கம்:வாழும் தமிழ்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 சிந்தனை உலகத்து வார்த்தைகள்

உலகத்தில் உள்ள பொருள்களில் கண்ணுலும் மற்றப் புலன்களாலும் உணர்ந்து கொள்ளும் பொருள்கள் ஒருவிதம்; அவற்றைக் கொண்டு. ஊகித்துக் கருத்தால் தெரிந்துகொள்ளும் பொருள்கள் ஒருவிதம். ஒரு மொழி உண்டானபோது முதல் முதல் கண்ணிலுைம் காதிலுைம் உணர்ந்த பொருளுக்குப் பெயர்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். வரவரப் பிற புலன்களால் உணர்வதற்குரிய பொருள்களுக்குப் பெயர்கள் வழக்கில் வரும். மனித வாழ்க்கை பண்படப் பண்பட மக்களுக்குச் சிங்தனுசக்தி அதிகமாகும். தினந்தோறும் பழகும் உலகத்துக்கு. அப்பாலே உள்ளம் செல்லும். அப்போது அந்தச் சிந்தனே விரிவுக்கு ஏற்றபடி மொழி வளர்ச்சியும் அமையும். .

குழங்தை வரவர எப்படிப் பேச்சைப் பழகிக் கொள்கிறது என்பதைக் கவனித்தால் அதைக் கொண்டு மொழி வளர்ந்த விதத்தையும் ஒருவாறு தெரிந்து கொள்ளலாம். குழங்தை முதல் முதலில் கண்ணுக்குப் புலப்படும் பொருள்களைத் தெரிந்து கொள்கிறது. அம்மா, அப்பா, அண்ணு முதலிய சொற்களே குழந்தை மொழியின் முதற் சொற்கள். பாலும் சோறும் பொம்மையும் ஆகிய பொருள்களைத், தெரிந்துகொள்ளும்போது அவற்றின் பெயர்களையும் தெரிந்துகொள்கிறது. பிறகுதான், கடக்கிருன், சிரிக்கிருன் என்பன போன்ற வினைச் சொற்களை அது பழகிக் கொள்கிறது. சின்னஞ்சிறு குழந்தையிடம். 'கோபம் என்று சொல்லிப் பாருங்கள். அது தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/190&oldid=646331" இலிருந்து மீள்விக்கப்பட்டது