பக்கம்:வாழும் தமிழ்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் வளம் 193

வழக்கிலே வழங்கும் சொற்களோடு, இலக்கியத் திலே வழங்கும் சொற்களும் தோன்றும்; சில சொற்களுக்கு இலக்கியத்திலே புதிய பொருள்களும் அமையும். நீர் என்ற சொல் வழக்கில் வழங்கும் போது புனலேக் குறிக்கிறது; அது இலக்கியத்தில் அதைக் குறிப்பதோடு, இயல்பு என்ற மற்ருெரு பொருளேயும் குறிக்கிறது.

இயல்பாக வழக்கிலே வ ங் த சொற்களை இயற்சொல் என்று தமிழில் சொல்வார்கள். இலக்கிய உலகத்தில் புலவர்கள் வழங்கும் சொற்களேத் திரிசொல் என்று சொல்வார்கள். இலக்கியத்தில் இயற்சொல்லும், திரிசொல்லும் ஆகிய இரண்டும் பயன்படும். வழக்கிலோ இ யற் சொல் .ே ல பயன்படும்.

தமிழ் மொழி என்பது வழக்கு மொழி மாத்திரம் அன்று ; இலக்கிய மொழி அதன் பகுதியே. ஆதலின் இயற்சொல், திரிசொல் என்ற இரண்டு வகைச் சொற்களும் தமிழ்ச்சொற்களே.

இயற்கையாகத் தமிழ் கிலத்தில் வழங்கும் சொல் இயற்சொல் என்று சொல்லும்போது, ஒரு சங்கடம் வந்து விடுகிறது. திருநெல்வேலிச் சீ ைம யி ல் வழங்கும் சில வார்த்தைகளின் பொருள் சென்னையில் இருப்பவர்களுக்கு விளங்காது. அப்படியே தமிழ் நாட்டின் ஒவ்வொரு பகுதியில் சில சொற்கள் பெருக வழங்கும்; ஆல்ை அவற்றை மற்றப் பகுதியினர் எ வரி தி ல் தெரிந்து கொள்ள மாட்டார்கள். அவற்றைத் திசைச்சொல் என்று தனியே பிரித்துச் சொன்னர்கள். தமிழ்ச் சொற் கூட்டத்திலே அவைகளும் சேர்ந்தவையே. ஆலுைம் இயற் சொற்கள் ஆகா. -

வா. த. -- 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/202&oldid=646358" இலிருந்து மீள்விக்கப்பட்டது