பக்கம்:வாழும் தமிழ்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் வடசொல் 199

வாக்கிய மரபில் இன்றும் தமிழைப் பின்பற்றியே கடக்கின்றன. எழுத்திலும் சொல்லிலும் வட மொழியிலிருந்து அதிகமாக அவை கடன் வாங்கிக் கொண்டன. தமிழ் அங்த அளவுக்கு வாங்கிக்கொள்ள வில்லை. இயற்கையான செல்வம் படைத்தவர்கள் கடன் வாங்க யோசிப்பார்களல்லவா?

ஆனல் அடியோடு கதவைச் சாத்தி மூடி உள்ளே வராதே என்று சொல்லவில்லை. ஏனெனில் வடமொழி எங்கிருந்தோ வரவில்லை. இமயம் முதல் குமரி, வரையில் மொழிகள் வேருக இருந்தாலும் உள்ளம் ஒன்ருகத்தான் இருந்தது. அறம், பொருள், இன்பம், வீடு என்ற உறுதிப் பொருள்களைப் பற்றி இந்திய நாடாகிய காவலர் தீவு முழுவதும் ஒரே மாதிரியாக எண்ணியது. இலக்கியத்திலே வெவ்வேருக இருங் தாலும் சாத்திரங்களிலே இ ங் தி யா ஒருமைப் பாட்டைக் காட்டியது.

பழங் காலத்தில் சமய நூல், பிற சாத்திரங்கள் யாவும் பெரும்பாலும் வடமொழியில்தான் இருந்தன. காரணம் என்ன? அது அறிவைப் பொதுவாக்கும் கருவியாக உதவியது. இமயம் முதல் குமரி வரை வடமொழி வல்லார் பலர் இருந்தனர். தமிழ் காட்டிலும் பலர் இருங்தனர். கொல்காப்பியரே' சிறந்த வடமொழிப் புலவர். சமய சாத்திரங்களும், பிற கலேகளும் மனித சாதிக்கே பொதுவானவை, இந்தியா அனேத்தும் ஒன்று என்ற நினைவிலே இந்த காட்டுக்கு ஒரு தனிச் சால்பு அமைந்திருந்தது. அதை வற்புறுத்தும் சாத்திரங்கள் இந்தியர் அனேவருக்கும் பயன்பட வேண்டுமானல், பொது மொழி ஒன்றில் தானே இருக்கவேண்டும்? ஆதலின் சமய நூல்களும் பிறவும் வடமொழியில் எழுந்தன. அந்த நூல்களில் மொழி பிரதானம் அன்று; கருத்தே பிரதானம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/208&oldid=646372" இலிருந்து மீள்விக்கப்பட்டது