பக்கம்:வாழும் தமிழ்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்பின் அழகு - . 269

மாய்தலும் பிறத்தலும்

வளர்ந்து வீங்கலும் தேய்தலும் உடைமையைத்

திங்கள் செப்புமால் - - என்று புலவர் பாடுகிருர். மனிதன் செத்துப் போவதையும், பிறகு பிறவி எடுப்பதையும், அப்படி எடுத்த பிறவியில் வளம் பெற்று வளர்வதையும் வளம் சுருங்கி மங்குவதையும் சங்திரன் சொல்லு கிறது என்று சொல்லுகிருர் புலவர். சந்திரன் வாய்திறங்தா சொல்கிருன்? அவனுடைய தேய்வும், வளர்ச்சியும், மறைவும், உ த ய மு ம் இந்த உண்மைகளே நினைவுக்குக் கொண்டு வருகின்றன. அதையே புலவர் அழகாகச் சொல்கிரு.ர்.

இப்படிச் சொல்லும் அழகையெல்லாம் பேச்சு வழக்கிலும் செய்யுள் வ ழ க் கி லு ம் கண்ட தொல்காப்பியர், இப்படிச் சொல்வது குறிப்பு வகையைச் சேரும் என்று சூத்திரம் அமைக்கிருர்.

வாரா மரபின வரக்கூ றுதலும் என்னு மரபின எனக்கூ றுதலும் அன்னவை எல்லாம் அவற்றவற்று இயல்பான் இன்ன என்னும் குறிப்புரை ஆகும். வருவதற்குரிய பொருள்கள் அல்லாதனவற்றை வருவனவாகச் சொல்வதும், பேச முடியாதவற்றைப் பேசுவனவாகச் சொல்வதும், அப்படி வரும் எல்லா வகையான பேச்சும் அந்த அந்தப் பொருளின் இயல்புகளைச் சொல்ல வந்த குறிப்பு வார்த்தை யாகும் என்பது இதன் பொருள்.

இந்தக் குறிப்பு, பேச்சு வழக்கிலே முளையிட்டு உரை நடையிலே கொடியோடிச் செய்யுளிலே பூத்துக் கனிந்து நிற்கிறது. -

வா. த.-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/218&oldid=646393" இலிருந்து மீள்விக்கப்பட்டது