பக்கம்:வாழும் தமிழ்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் பெண் பிரிவு - 13

உண்டு. அவற்றில் எல்லா வார்த்தைகளையும் ஆண்பால் என்றும் பெண்பால் என்றும் பிரித்திருக்கிருர்கள். பொருள் ஆண்பாலாக இருக்கும்; அதைக் குறிக்கும் வார்த்தையோ பெண்பாலாக இருக்கும்!

ஆண் தன்மை உடையவனே ஆண் என்று சொல்லலாம்; பெண் தன்மை உடையவளேப் பெண் என்று சொல்லலாம். இரண்டுங் கெட்ட மனிதர் இருக்கிருர்களே, அவர்களே எப்படிச் சொல்வது? ஆணைச் சுட்டும் சொல் ஆண்பாற் சொல்; பெண்ணைச் சுட்டும் சொல் பெண்பாற் சொல் என்ருல் இரண்டும் அற்ற அலியைச் சுட்ட அலிப்பால் என்று ஒன்று இருக்க வேண்டாமா?

தமிழ் உயிரோடு வளர்ந்த மொழி. வாழ்க்கையை ஒட்டி வந்த மொழி. அதன் இலக்கணமும் வாழ்க்கையை ஒட்டியதே ஒழியத் தனியாக இருந்து கெட்டுருப் போட்டுத் தலைவலியை உண்டாக்கிக் கொள்ள வங்ததன்று. ஆகவே வாழ்க்கையில் அலியின் கிலே எவ்வாறு அமைந்திருக்கிறது என்று பார்க்கலாம். யாராவது தம்மை அலி என்று சொல்லிக்கொள்ள விரும்புவது உண்டா? அது கிடக்கட்டும். அலிக்கென்று தனியிடம், தனி உடை, தனிப்பேர் இருக்கின்றனவா? இல்லை. பின்னே அவர்கள் எப்படி வாழ்கிரு.ர்கள்? சில பேர் பெண்களைப்போல் சேலை கட்டிக் கொண்டு பெண்கள் கூட்டத்திலே கலந்து கொள்ளுகிருர்கள். தங்கள் பெயர்களேயும் காமாட்சி, மீட்ைசி என்று வைத்துக்கொள்ளுகிருர்கள். அப்படியே வேறு சிலர் வேட்டி கட்டிக்கொண்டு ஆடவர் கூட்டத்தோடு சேர்ந்து பழகுகிருர்கள். ஆடவர் பெயரையே வைத்துக் கொள்கிருர்கள். அவர்கள் அப்படிப் பழகுவதனால், அவர்களைப்பற்றிய பேச்சு வரும்போது ஆடவரைப் போலவே வழங்கு கிருேம். இதுதான் வாழ்க்கையில் கடைபெறுவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/22&oldid=645957" இலிருந்து மீள்விக்கப்பட்டது