பக்கம்:வாழும் தமிழ்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை - - 221

விளி மரபு என்ற நான்காவது இயல். விளிவேற்று மையின் இலக்கணத்தைச் சொல்வது. இதில் உள்ள சூத்திரம் 37.

இதில் விளியின் இயல்பு, விளியை ஏற்றுக் கொள்ளும் பெயர்கள், அதனை ஏலாப் பெயர்கள், விளியை ஏற்கும் பெயர்கள் எப்படி எப்படி வேறுபடும் முதலியன உள்ளன. இதில் வரும் சில செய்திகள் வருமாறு:

அன்னை என்பது விளிக்கும்போது அன்னுய் எனவும் வரும். தான், அவன், இவன், யான், யாவன், அவள், இவள், உவள், யாவள், தமன், தமர். தமள், நமன், கமர், நடிள், நுமள், நுமன், நூமர், எமன், எமர், எமள், தம்மாள், 5,071, 5DIDIST, DDTS 5D TT, ಇಲ್ಲLDTT, நும்மான், நும்மாா, நும்மாள், எம்மான், எம்மா, எம்மாள் முதலியன விளியைப் பெரு. -

பெயரியல் என்பது சொல்லின் பொது இலக்கணத் தையும் பெயர்ச் சொல்லின் இலக்கணத்தையும் 43 சூத்தி ரங்களால் சொல்வது. இதில் வரும் செய்திகளிற் சில வருமாறு: - -

பெயர், வினை, இடை, உரி என்னும் நால்வகைச் சொற்களும் பொருளைக் குறிப்பன. ஒரு சொல்லாலே அதன் பொருளும் சொல்லுருவமும் வெளிப்படும். வெளிப் படையாகவும் குறிப்பாகவும் பொருள் வெளிப்படும். ஆண்மகன், பெண்மகள், பெண்டாட்டி, நம்பி, நங்கை, மகன், மகள், மாந்தர், மக்கள், ஆடூஉ, மகடூஉ, அவ்வாளன், இவ்வாளன், உவ்வாளன், அம்மாட்டான், இம்மாட்டான், உம்மாட்டான், அப்பெண்டு, இப்பெண்டு, உப்பெண்டு, அன்ன்ை, அன்னுள் என்பன சில உயர் திணைப் பெயர்கள். பெண் மகன் என்பது உயர்திணையில் வருவது. சோழியன் என்பது போன்ற நிலப் பெயர், மலையமான் முதலிய குடிப் பெயர், அத்தி கோசத்தார் என்பது போன்ற குழுவின் பெயர், வருவார் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/230&oldid=646420" இலிருந்து மீள்விக்கப்பட்டது