பக்கம்:வாழும் தமிழ்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்விகள் 19°

முகமானதாக இருந்தாலும் விடை என்றே கொள்ளலாம்’ என்று ஒரு சூத்திரம் வருகிறது. இப் பகுதியில் உரையாசிரியர்கள், கேள்வி எத்தனே வகைப்படும், விடைகள் எத்தனே வகைப்படும் என்று ஆராய்க் திருக்கிருர்கள். ஒவ்வோர் உரையாசிரியரும் தக்க உதாரணங்களோடு அவற்றை விளக்கியிருக்கிருர்கள். அவர்களிற் சிலர் உரைகளே ஆராய்ந்து பிற் காலத்தில் பவணந்தி முனிவர் என்ற சைனப் பெரியார் நன்னூல் என்ற இலக்கண நூலைச் செய்தார். தொல்காப்பியத்துக்குப் பிறகு அங்த இலக்கணத் துக்கு உண்டான புகழ் வேறு எதற்கும் இல்லே. இன்றும் தமிழ்ப் புலவனென்ருல் அவனுக்கு நன்னூலில் நல்ல பயிற்சி இருக்க வேண்டும் என்று அறிஞர்கள் சொல்வார்கள். இடையிலே சில காலங் களில் தொல்காப்பியத்தைப் படிப்பவர்கள் குறைந்து போனர்கள். அதற்கு உள்ள உரைகளைப் பாடம் சொல்பவர்களும் அங்கொருவரும் இங்கொருவரு மாகவே இருந்தார்கள். அக்காலத்தில் நன்னூலே தமிழ் நாடு முழுவதும் பரவி, சிறந்த இலக்கண நூலென்ற சிறப்பை அடைங்தது. கன்னுரலே ஒரு வகையில் தொல்காப்பியத்துக்கு உரை நூல் என்று சொல்லலாம். தொல்காப்பியர் சுருக்கமாகச் சொன்ன சில விஷயங்களே நன்னூலார் விரித்து விளங்கும்படி சொல்லியிருக்கிருர், வினு விடை வகைகளையும், அவர் விரிவாகச் சொல்லுகிரு.ர்.

兴 # 兴 #

கேட்பவனுடைய கருத்தும் அறிவு கிலேயும் காரணமாகக் கேள்விகள் பல வகைப்படுகின்றன. பள்ளிக்கூடத்தில் படிக்கும் பையன் வாத்தியாரை, 'அமெரிக்காவின் தலைநகரம் எது?’ என்று கேட்கிருன். வாத்தியார் பையனிடம், அமெரிக்கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/28&oldid=645971" இலிருந்து மீள்விக்கப்பட்டது