பக்கம்:வாழும் தமிழ்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

விடைகள்

விளுக்களைப்பற்றி ஆராய்ச்சி பண்ணிய இலக் கணக்காரர் விடைகளையும் ஆராய்ந்திருக்கிருர், மக்கள் பேசும் பேச்சில் எத்தனையோ விசித்திரங்கள் இருக்கின்றன. அவற்றைச் சற்றுக் கூர்ந்து கவனித்தால் மனிதன் அறிவு என்ற அதிசயப் பொருளைப் படைத்திருப்பதால் தன் சம்பந்தமான காரியங்களில் எப்படிச் சுவையைப் புகுத்துகிருன் என்பது தெரியவரும். பேச்சிலே வெட்டொன்று துண்டு இரண்டாகப் பேசுவதும், வழவழவென்று பேசுவதும் இனிமையைத் தருவதில்லே. சொல்பவ. னுடைய வார்த்தைகளுக்கு இயற்கையாக என்ன பொருள் உண்டோ, அந்தப் பொருளுக்குப் புறம்பே குறிப்பாக உணரும்படி ஒரு கருத்து இருந்தால், அதனைத் தெரிந்துகொள்ளும்போது ஒருவித இன்பம் உண்டாகிறது. இத்தகைய இன்பம் இலக்கியத்தில் மிகுதியாக இருக்கும். பேச்சிலும் ஒரளவு இருக்கிறது. -

மலரில் தேன் இருப்பது இயற்கையே. ஒவ்வொரு மலரிலும் ஓரளவு தேன் உண்டு. ஆல்ை தேனடையில் ஒரே தேகை இருக்கிறது. இப்படியே மனிதனுடைய பேச்சில் ரசம் ஒரளவு ததும்புகிறது. இலக்கியத் லோ ரசங்களையெல்லாம் புலவர்களாகிய வண்டுகள் தொகுத்து வைத்திருக்கிருர்கள். மலரினுள்டே தேன் இருப்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும். மனிதன் பேச்சினுடே சுவை இருப்பதும் கவனித்தால் தெரிய வரும். இ ல க் க ண ம் இயற்றியவர்கள் உலக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/33&oldid=645982" இலிருந்து மீள்விக்கப்பட்டது