பக்கம்:வாழும் தமிழ்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வாழும் தமிழ்

'பணம் இல்லை என்பது தெரிந்தும் கேட்பது நியாயமா??

கேட்ட கேள்விக்கு, இல்லையென்று நேர்முகமான பதில் வராவிட்டாலும் சுற்றி வளைத்துச் சொல்வதில் அந்தப் பதில்தான் புலப்படுகிறது. ஆல்ை அந்தப் பதில் மற்ருெரு கேள்வி உருவத்தில் இருக்கிறது. இது வினவெதிர் விளுதல்.

'உனக்கு எத்தனை பிள்ளைகள்?’ “அதற்கெல்லாம் நான் புண்ணியம் பண்ணி யிருக்கிறேன, என்ன?”

இதுவும் வினவெதிர் விதைல். "நூறு ருபாய் கடன் தருவாயா?” 'கேற்றுத்தான் புடைவை வாங்கினேன்.” விடை கூறுபவன், “ரூபாய் தர முடியாக நிலையில் இருக்கிறேன்' என்பதைப் புலப்படுத்து கிருன். ஆனால், உண்டு இல்லே என்று சொல்லாமல் , முன்பு நிகழ்ந்த ஒன்றைச் சொல்கிருன்.

'கொஞ்சம் பொங்கல் சாப்பிடுகிருயா?” 'வயிறு வலிக்கிறது.” பொங்கல் சாப்பிட மாட்டேன் என்ற எதிர்மறை விடையைத் தன்பால் நிகழும் ஒன்றைச் சொல்விப் புலப்படுத்துகிருன். - . இத்தகைய விடைகளே உற்றது உரைத்தல் என்பார்கள்.

இதுபோலவே இனிமேல் வரும் காரியத்தைச் சொல்வி விடையைப் புலப்படுத்துவதும் உண்டு.

'அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து, கொள்கிருயா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/37&oldid=645992" இலிருந்து மீள்விக்கப்பட்டது