பக்கம்:வாழும் தமிழ்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரியாதைப் பேச்சு 65

மதிப்பில் உயர உயர அதனைக் குறிக்க இத்தகைய அடையாளங்கள் இருப்பது காகரிகத்தின் சிறப்பைக் காட்டுகிறது. தமிழர் மரியாதை கொடுத்து வாங்கு வதில் சிறந்தவர்கள். ஆகவே, வாழ்க்கையில் அவசிய மாகி விட்ட இந்த மரியாதை, பேச்சிலே வருவதும் இன்றியமையாத தாகிவிட்டது. ஒரு சமுதாயம் முழு வதுமே சிறந்ததாகக் கருதும் வழக்கத்தை இலக் கணம் தவறென்று சொல்லலாமா? இலக்கணம் என்பது வாழ்க்கையோடு ஒட்டிவருவது என்பதைப் பல தடவைகளில் பார்த்துவருகிருேமே ஆகையால் இத்தகைய ப ன் ைம க ளே இலக்கணத்திலும் பாட்டிலும் காணவில்லேயே என்று நினைக்க வேண்டாம். 'வழக்கிலே உயர்வைப் புலப்படுத்த வருவன அவை. தவறு போலக் கோன்றினுலும் தவறு அல்ல; கொள்ளுதற்கு உரியனவே' என்று தொல்காப்பியர் சொல்லுகிரு.ர்.

இப்படியே நமக்குப் பிரியமான அஃறிணைப் பொருளேயும் அன்பினுல் உயர்த்திக் கூறுவதுண்டு. பசுமாடு மேய்ந்துவிட்டு வருகிறது. அதை ஆவலோடு கட்டிக்கொண்டு, எங்கள் அம்மா வந்துவிட்டாள்" என்று கொஞ்சுகிருேம். வார்த்தைகளே மாத்திரம் வைத்துக்கொண்டு பார்த்தால்,புடைவையைக் கட்டிக் கொண்ட பெண்பால் ஒருத்தியைத்தான் அங்கே காம் எதிர் பார்ப்போம். ஆனல் வார்த்தைக்குப் பின்னே உள்ள வாழ்க்கையையும் கினைத்துப் பார்க்கவேண்டும். அப்போது அந்தப் பசுவை நாம் கொஞ்சுகிருேம் என்ற உண்மை வெளியாகும்.

பிரியமாக வளர்த்து வரும் காயை, 'பெரியவரே, எங்கே போயிருந்தீர்?’ என்று ஒருவர் கேட்கிரு.ர். அவருடைய அன்பும் சுவை உணர்ச்சியும் அந்தப் பேச்சிலே தொனிக்கின்றன. 'அஃறிணையை உயர் திணையாகச் சொல்வது முதல்குற்றம். ஒரு பொருளைப்

வா. த .-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/74&oldid=646075" இலிருந்து மீள்விக்கப்பட்டது